செய்திகள்
கோப்புபடம்

திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியீடு - வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Published On 2020-08-15 19:57 GMT   |   Update On 2020-08-15 19:57 GMT
திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்ட நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை:

வங்கி ஊழியர்கள், 100 சதவீதம் வேலைக்கு வரவேண்டும். வழக்கமான நாட்களில் வழங்கப்படும் வங்கி சேவைகளை தற்போது வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த அறிவிப்பு, மத்திய-மாநில அரசுகளின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக கூறி தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வருகிற 20-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தது.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம், மாநில வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் வங்கி நிர்வாக அதிகாரிகளுடன், தொழிலாளர் நல துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘ஊழியர்கள், 100 சதவீதம் வேலைக்கு வரவேண்டும் என்ற வழிமுறை மாற்றப்பட்டு, 50 சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில் வரவேண்டும். மீதம் உள்ள அனைத்து வழிமுறைகளும் தொடரும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வருகிற 20-ந்தேதி அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News