செய்திகள்
கைது

பழனி-நத்தத்தில் லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது

Published On 2019-12-16 16:07 GMT   |   Update On 2019-12-16 16:07 GMT
பழனி மற்றும் நத்தத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றவர்களை கைது செய்தனர்.

பழனி:

பழனி டவுன் போலீசார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பழனி 22-வது வார்டை சேர்ந்த சேட் (வயது 36) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.1,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நத்தம் அவுட்டர் பகுதியில் பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது பெட்டிக்கடையில் விற்பனை செய்து வந்தவர் நத்தத்தை சேர்ந்த வெற்றிராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நல்லநேரம், தங்கம், குயில், குமரன், விஷ்ணு, ரோசா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுக்களையும், ரொக்கம் ரூ.1800, ஒரு செல்போனையும் கைப்பற்றினர். மேலும் இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News