செய்திகள்
கேஎஸ் அழகிரி

பா.ஜனதா அல்லாத ஆட்சியை தடுக்க, ஜனாதிபதி ஆட்சி- கே.எஸ்.அழகிரி

Published On 2019-11-13 09:59 GMT   |   Update On 2019-11-13 09:59 GMT
பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதை தடுக்கவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் வருகின்ற 17-ந்தேதி நடைபெறும். அதில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

நானும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் போல, ஏனெனில் நாங்கள் பார்க்காமலேயே பல வி‌ஷயங்களை பேசிக்கொள்வோம்.

சிவசேனா ஆட்சி அமைத்து விடும் என்ற பயத்தில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதை பா.ஜ.க. விரும்பவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது தவறு.


தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் வெற்றி மூலமாக நிரூபித்திருக்கிறார்.

இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் காங்கிரஸ் கட்சி அயோத்தி தீர்ப்பை வரவேற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News