என் மலர்

  நீங்கள் தேடியது "KS Alagiri"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவில் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இந்தியாவில் 10 முதலாளிகள் பஞ்சை கொள்முதல் செய்து அடைத்து வைத்துள்ளனர்.

  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி வெங்கட்ரமண வீதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

  இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  பின்னர் அலுவலகத்திற்குள் சென்ற அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:-

  இந்தியாவில் நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இந்தியாவில் 10 முதலாளிகள் பஞ்சை கொள்முதல் செய்து அடைத்து வைத்துள்ளனர்.

  இந்தியாவில் பஞ்சு ஏற்றுமதி செய்யலாம் என்றனர். ஏனென்றால் இந்தியாவில் பஞ்சு மார்க்கெட் என்பது விவசாயிகளின் கையில் இல்லை. கார்ப்பரேட்டுகளின் கையில் தான் உள்ளது.

  இந்தியாவின் பஞ்சு முழுவதும் 10 பேரிடம் மட்டுமே அடங்கி உள்ளது. அது வேறு யாரிடம் செல்லவில்லை. அவர்கள் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த பிறகே மத்திய அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தது.

  ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைக்கவே ஏராளமான பஞ்சுகளை ஏற்றுமதி செய்துவிட்டனர். இதன் விளைவு இந்தியாவில் பஞ்சு விலை உயர்ந்தது. நெசவுத்தொழில் செய்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

  இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து பஞ்சை இறக்குமதி செய்தனர். அதற்குள்ளாக சீசனே முடிந்து விட்டது. ஓராண்டு காலத்திற்குள் நெசவுத்தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்டதிருத்த மசோதா என்பது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், 100 யூனிட் மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு எதிராக உள்ளது. எனவே மின்சார சட்ட திருத்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பின்னர் அவர் 75-வது சுதந்திரதினத்தையொட்டி பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சுதந்திர தின பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நடிகர் ரஜினி கவர்னரை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம்.
  • கவர்னர் தேவையில்லாமல் பல்கலைக்கழகங்களில் தலையிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக செயல்களில் கவர்னர் தலையிட்டு அரசியல் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் முதல்-அமைச்சர் மாநாட்டை நடத்துவது நல்ல முடிவு.

  இந்த மாநாட்டில் சில நடைமுறைகளை உருவாக்க வேண்டும். கவர்னர் தேவையில்லாமல் பல்கலைக்கழகங்களில் தலையிடுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

  நடிகர் ரஜினி கவர்னரை சந்தித்து பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் தமிழக மக்களுக்கு கவர்னர் நிறைய செய்ய விரும்புகிறார் என்று கூறி இருக்கிறார். அதில் மகிழ்ச்சி.

  தமிழக மக்கள் இப்போது விரும்புவதும், எதிர்பார்ப்பதும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். எல்லா கட்சிகளும் இதை வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து 6 சதவீத வரிவசூல் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.

  ஆனால் திட்டங்கள் மூலம் திருப்பி கிடைப்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே இதையும் அதிகரிக்க வேண்டும். இந்த விசயங்கள் பற்றி கவர்னரிடம் ரஜினி பேசி இருக்க வேண்டும். பேசி இருப்பார் என்று நம்பிக்கை உள்ளது. இது பற்றிய தகவலையும் ரஜினி வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3ஜி, 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி ஏலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கேற்கவில்லை.
  • செல்பேசி சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 10 சதவிகிதமாக குறைந்து மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டதில் அரசுக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் கூறினர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு முடிந்த இந்த ஏலத்தில் மத்திய அரசுக்கு வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து நூற்று எழுபத்து மூன்று கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிட்டியது என மோடி அரசு அறிவித்திருப்பது நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளது.

  ஏற்கனவே 3ஜி, 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி ஏலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கேற்கவில்லை. இதனால் செல்பேசி சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 10 சதவிகிதமாக குறைந்து மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

  முழுக்க முழுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்றன. குறிப்பாக இதுவரை டெலிகாம் சேவையில்-வணிகத்தில் ஈடுபடாத ஆனால் பிரதமர் மோடியின் உற்ற நண்பரான கௌதம் அதானியின் ஏ.டி.என்.எல். நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இன்னமும் பழமையான 2ஜி மற்றும் 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அதன் செல்பேசி சேவையை வழங்க நிர்பந்திக்கும் மோடி அரசு, தனியார் நிறுவனங்கள் 4ஜி ஸ்பெக்ட்ரம் வழியாக நவீன செல்பேசி சேவையை வழங்க பத்தாண்டு கழிந்த பிறகும் இன்றுவரை 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மறுப்பது கண்டனத்துக்கு உரியது.

  5ஜி ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1716 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது.

  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
  • விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பா.ஜ.க.வினர் சிலர் ஒட்டியிருக்கின்றனர்.

  இதனால் ஆத்திரமடைந்த சில அமைப்பினர் கருப்பு வர்ணத்தை கொண்டு மோடி படத்தை அழித்துள்ளனர். இந்த செயலை செய்ததற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மோடியின் படத்தின் மீது கருப்பு மை பூசியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது.
  • சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வன்முறை களமாக மாற்றியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

  உயர்ந்த சித்தாந்தம் இருப்பதால்தான் காங்கிரஸ் கட்சி வளர்ந்து வருகிறது. தற்போதைய அரசியலுக்கு காந்தியும், காமராஜரும் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தால் இன்று 15 கோடி குடும்பங்கள் வாழ்வு பெற்றுள்ளன.

  ஆனால் இலவச திட்டங்கள் நாட்டுக்கு பெரும் ஆபத்து என பிரதமர் மோடி விமர்ச்சிக்கிறார். வெறுப்பு அரசியலை காங்கிரஸ் விரும்பவில்லை. ஜாதி மதம், மக்களை பிளவுபடுத்தும் என்பதாலேயே மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனால்தான் இந்தியா ஒற்றுமையாக உள்ளது.

  நாட்டின் ஒற்றுமைக்கு காரணமாக இருந்ததால்தான் காந்தியடிகள், இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிய 3 தலைவர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்த தியாகத்தை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

  நரேந்திர மோடி நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. சனாதானத்துக்கு எதிராக பேச காங்கிரஸ் கட்சிக்கு முழு உரிமை உள்ளது என்றார்.

  அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி ராணுவம் மற்றும் புலனாய்வு பின்புலம் கொண்டவர். எனவே தமிழ்நாடு போன்ற ஜனநாயக அரசு செயல்படும் மாநிலத்துக்கு அவர் ஏற்றவர் அல்ல. மாகாணங்களில் அவரை நியமிக்கலாம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்பதில் தவறில்லை. ஆனால் மாநில அரசின் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அவர் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். சுய மரியாதை அரசியல் நடைபெறும் தமிழகத்தில் பா.ஜ.க.வின் கருத்துக்களை எளிதாக திணிக்க முடியாது.

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வன்முறை களமாக மாற்றியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருக்கிறது.
  • பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135-வது இடம் வகிப்பதாக 2022-ம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட மேலும் 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

  ஆரோக்கியம் மற்றும் உயிர் வாழ்தலில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதையே இந்த குறியீட்டு அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. முட்டுக்கட்டையாக இருக்கிறது.

  பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று வாய் கிழியப் பேசும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பாலின சமத்துவத்தில் 135-வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

  5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை விட, பாலின சமத்துவம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான அதிகாரம் ஆகியவற்றில் தான் இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் வார்த்தை ஜாலங்கள் மற்றும் வெற்று பேச்சுகளால் அல்ல.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார்.
  • அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியில் இருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள், உடுத்தும் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளன.

  மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யை உயர்த்துவதால் நேரடியாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், கார்ப்பரேட்டுகள் நலனில் அக்கறையுள்ள மோடி அரசு வருமான வரியையோ, கார்ப்பரேட் வரியையோ இதுவரை உயர்த்தாமல் அதற்கு மாறாக சலுகைகளை அளித்து வருகின்றன.

  இந்நிலையில் தமிழக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.

  தி.மு.க. நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியில் இருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க. மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

  இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வருகிற 27-ந்தேதி திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

  ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. இந்நிலையில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.
  • ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

  சேலம்:

  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மோடி அரசின் மேலும் ஒரு கொடுமையான திணிப்பு அக்னிபாத் திட்டம். பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய ஆர்.எஸ்.எஸ்.சிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக குரலை நெறிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.

  ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல் தொண்டர்களிடம் ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறார் மோடி. காங்கிரஸ் பொதுத்துறையையும், தனியார் துறையையும் வளர்த்தது. ஆனால் பா.ஜ.க. பொதுத்துறையை அழித்துவிட்டு தனியார் துறையை வளர்க்கிறது.

  பா.ஜ.க.வின் தவறான பொருளாதார கொள்கையால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும்.

  அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது.

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

  குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பா.ஜ.க. தங்கள் கொள்கையை முறையாக பின்பற்றியுள்ளனர். திரவுபதி என்ற பெயருக்காகவே அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
  • கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தைச் சேர்ந்த அதானியும், அம்பானியும் தங்கள் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் கவுதம் அதானியின் தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. தொலைத்தொடர்பு, வணிக வளாகங்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபம் ஈட்டுகிறது. துறைமுகம், ரெயில்வே துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபம் ஈட்டுகிறது அதானி குழுமம்.

  தொழிலதிபர்களை வைத்து பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நவீன விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் அதானியின் 8 ஆண்டுகால அசுர வளர்ச்சி காட்டுகிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் அதானியின் பின்னே நிற்கின்றன. அமலாக்கத்துறை அதானியை அரவணைக்கிறது. அரசின் மற்ற உயர் அரசு நிறுவனங்களுக்கும் அதானி செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறார்.

  அதானி போன்றோரை வளர்த்துவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி என்ற பெயரில் பெரும் தொகையை பெறுகின்றனர். அதாவது ஊழலை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கி விட்டதையே இது காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் கவுதம் அதானி காலூன்ற உதவி செய்ததன் மூலம், ஊழலை கடல் கடந்தும் விரிவு படுத்தியிருக்கிறது மோடி அரசு.

  கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தைச் சேர்ந்த அதானியும், அம்பானியும் தங்கள் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பா.ஜ.க. தரப்பில் அடைந்த ஆதாயத்தை இமாலய ஊழல் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
  • தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

  சென்னை:

  மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  அக்னிபாத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

  எனவே, அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

  இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  வேலை வாய்ப்பின்றி அல்லாடும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னிபாத்' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

  'அக்னிபாத்' என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.

  அக்னிபாத் என்னும் இந்து விரோத-வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo