என் மலர்

  நீங்கள் தேடியது "Ruby manoharan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணி செய்வது மனநிறைவை தருகிறது.
  • என் உயிர் பிரியும் வரை காங்கிரசில்தான் இருப்பேன்.

  நெல்லை :

  நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாநில நிகழ்வுகளை கவனிக்கவில்லை என பலர் வீண்பழி சுமத்துவார்கள். ஆனால் நேற்றைய (அதாவது நேற்று முன்தினம்) சம்பவம் மூலம் அது துடைத்து எறியப்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டனுக்கு காலையில் கிடைத்த தண்டனையை அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாலையிலேயே தீர்த்து வைத்து மாபெரும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

  அகில இந்திய காங்கிரஸ் தலைமை மூலம் எனது இடைநீக்கத்தை நிறுத்தி வைத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை வணங்குகிறேன். இதேபோல் அகில இந்திய தலைமைக்கு இந்த பிரச்சினையை உடனடியாக தெரியப்படுத்தி நடவடிக்கை எடுத்த பொதுச்செயலாளர் வேணுகோபாலையும் வணங்குகிறேன்.

  நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணி செய்வது மனநிறைவை தருகிறது. உயிர் உள்ள வரை மக்களுக்காகவும், கட்சிக்காகவும் பொறுப்புடன் பணி செய்வேன்.

  அகில இந்திய காங்கிரஸ் தலைமை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன். என் உயிர் பிரியும் வரை காங்கிரசில்தான் இருப்பேன். என் வாழ்க்கை முழுவதையும் காங்கிரசுக்காக அர்ப்பணித்து விட்டேன்.

  காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான் உடனடி தீர்வு கிடைத்துள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை.
  • செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளராகவும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரூபி மனோகரன்.

  கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

  இதுதொடர்பாக ரூபி மனோகரன் மற்றும் ரஞ்சன் குமார் ஆகியோர் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டு இருந்தனர்.

  இன்று காலையில் கே.ஆர்.ராமசாமி தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் ரஞ்சன் குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். ரூபி மனோகரன் ஆஜராகவில்லை. அவர் 15 நாள் அவகாசம் கேட்டு இருந்தார். இதையடுத்து ரூபி மனோகரனை கட்சி பொருளாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.

  இது தொடர்பாக ரூபி மனோகரன் கூறியதாவது:-

  நான் 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் அதிக அளவில் உறுப்பினர்களையும் சேர்த்துள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. செய்யாத தவறுக்காக என்னை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

  சட்டமன்ற தொகுதியில் எனக்கு பல வேலைகள் உள்ளன. அதனால் தான் இன்று ஆஜராகவில்லை. எனது விளக்கத்தை கேட்ட பின்னர் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
  • கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் கலந்தாலோசித்தது கிடையாது.
  • என்னை ‘பொருளாளர்’ என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர்.

  சென்னை :

  தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கையெழுத்துப் பெறப்பட்ட 62 மாவட்டத் தலைவர்களிடம், அந்தக் கடிதத்தை படித்துப் பார்ப்பதற்குகூட நேரம் கொடுக்காமல், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்பது கூட தெரிவிக்காமல், அவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

  நெல்லையில் இருந்து வந்திருந்த கட்சியினரை எப்படி ஓடஓட விரட்டி அடித்தார்களோ, அதே பாணியில் தான் 62 மாவட்டத் தலைவர்களிடமும் வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

  'மாநில பொருளாளர்' என்கிற பெயரை மட்டும்தான் நான் வைத்திருக்கிறேனே தவிர, நான் பொறுப்புக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரையில், மாநிலத் தலைவர் என்ன செய்தார் என்று, எனக்கு கடுகளவும் தெரியாது. பொருளாளர் பதவியை மட்டுமே எனக்குத் தந்திருக்கிறார்களே தவிர, கட்சியின் கொடுக்கல்-வாங்கல் பற்றி சிறிதளவும் கூட என்னிடம் சொன்னது கிடையாது. கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி என்னிடம் எப்போதுமே கலந்தாலோசித்தது கிடையாது. அதிகாரம் எல்லாமே தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் அவரே தன்னிச்சையாக செய்து வருகிறார்.

  இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்து இருக்கிறேன். என்னை 'பொருளாளர்' என்கிற பகடைக்காயாக மட்டுமே வைத்துள்ளனர். அந்தப் பதவியை என்னிடம் இருந்து பறித்தால், எனக்கு எதுவும் ஆகப்போவது இல்லை. அந்தப் பதவி இல்லை என்று நான் கவலைப்பட போவதும் இல்லை.

  ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்வேன். அதன்பிறகு, கட்சித்தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ‌. ஏற்பாட்டில் சுயதொழில், விவசாய கருத்தரங்கம் களக்காடு அருகே நாளை மறுநாள் நடைபெறுகிறது.
  • படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

  நெல்லை:

  நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நாங்குநேரி-களக்காடு சாலையில் கடம்போடு வாழ்வு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நாளை மறுநாள் (11-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறு, குறு கிராமிய தொழில்கள் மற்றும் வர்த்தக கருத்தரங்கம் நடைபெறுகிறது.

  கருத்தரங்கில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த படித்த, படிக்காத, அனுபவம் உள்ள சுயதொழில் செய்வோர், தொழில் செய்ய விரும்புவோர், விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

  எங்கே, எப்படிப்பட்ட லாபகரமான தொழில் தொடங்கலாம், அரசு மற்றும் வங்கிகளில் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி? ஒவ்வொரு தொழிலுக்கும் அனுமதி பெற யாரை அணுகுவது? தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எங்கே பெறலாம்? லாபகரமான விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் செய்வது எப்படி? உள்ளிட்ட பயிற்சிகள் கருத்தரங்கில் வழங்கப்படும்.

  ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கம், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு சிறு, குறு கிராமிய தொழில் முனைவோர் சங்கத்தின் நெல்லை கிளை உதவியோடு, மாவட்ட தொழில் மையம், எம்.எஸ்.எம்.இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

  பல பொருட்கள் தயாரிப்பது எப்படி என்கிற நேரடி செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.சுயதொழில் தொடங்க கடனுதவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு கடன் உதவிகளுக்கான ஆணைகளும் வழங்கப்படும்.

  கடனுதவி பெற விரும்புவோர், தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தொழில் திட்டத்துடன் (எந்திரங்கள் விலை) அன்றைய தினமே விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விடலாம்.

  சிறு, குறு கிராமிய தொழில்கள் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  கருத்தரங்கம் நடைபெறும் நாள் காலை 8 மணிக்கு நாங்குநேரி மற்றும் களக்காடு பஸ் நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  தொழில் முனைவோர், சுயதொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் விவசாய தொழில் செய்வோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  ×