என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொங்கனூரில் பழனிவேல் சித்தர் 15-ம் ஆண்டு குருபூஜை: கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார்
- தருமபுரி டி.என்.சி. விஜய் மகாலில் மதியம் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.
- ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நினைவாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 கொடிக்கம்பங்கள் நிறுவும் நிகழ்ச்சியினை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தொங்கனூரில் ஸ்ரீ மகா சங்கரலிங்கம் பித்தன் பழனிவேல் சித்தர் 15-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி நடைபெற்ற யாக பூஜை, பழனிவேல் சித்தர் குருபூஜை ஆகியவற்றை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று காலை தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவிலில் மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தருமபுரி டி.என்.சி. விஜய் மகாலில் மதியம் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நினைவாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 100 கொடிக்கம்பங்கள் நிறுவும் நிகழ்ச்சியினை அவர் தொடங்கி வைக்கிறார்.






