செய்திகள்
மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2019-09-19 15:04 GMT   |   Update On 2019-09-19 15:04 GMT
ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க வழிசெய்யும் நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிக்கலாமா? என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக உதித் சூரியா வீட்டில்  போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க வழிசெய்யும் நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிக்கலாமா? என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிளஸ் டு பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித் சூரியாக்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்கும்  நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா?  மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும், அதற்குத் துணைபோகும் அடிமை அ.தி.மு.க. அரசையும் அம்பலப்படுத்துவோம்! என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News