செய்திகள்
மு.க.ஸ்டாலின்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2019-09-03 13:51 GMT   |   Update On 2019-09-03 13:51 GMT
நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 5,000 கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.   

இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதி வழங்கி வருகிறது. இந்தாண்டு ஏப்ரலில் 23-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது, 20 சுங்கச்சாவடிகளில் கடந்த 1 -ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில்,  சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர்  கட்டண உயர்வு கண்டனத்திற்கு உரியது. அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை. சுங்கச்சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News