செய்திகள்

கொடைக்கானல் அருகே யானை நடமாட்டம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2019-06-25 10:00 GMT   |   Update On 2019-06-25 10:00 GMT
கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், பேரிஜம் ஏரியைப் பார்ப்பதற்கு வனத்துறையினர் சார்பில் வழங்கப்பட்டு வந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்த தடைதொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கொடைக்கானல் கீழ்மழைப் பகுதிகளான பண்ணை காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, கடுகுதடி, பாச்சலூர் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதி யில் விவசாயம் மேற் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

Tags:    

Similar News