செய்திகள்

மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-06-06 03:51 GMT   |   Update On 2019-06-06 03:51 GMT
எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர, நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் வெளியானது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவி சுருதி 685 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளார். மேலும் இந்திய அளவில் 57-வது இடத்தை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், எம்.பி.பி.எஸ்,. பி.டி.எஸ், படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் வழியில் மாணவர்கள் பதிவு செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News