search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online registration"

    • ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
    • தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

    உடுமலை:

    சமூக நலத்துறையின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தில் அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது.

    தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ - சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால் பலரும் ஒப்புகை சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்து க்கொள்கி ன்றனர். இந்த அலட்சியத்தால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.

    இறுதி நேரத்தில் கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறி கின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர். அனைத்து நலத்திட்ட ங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால் இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது. பயனாளிகளின் விபரங்களை அறியவும், விபரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
    • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் சத்திய மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் சமையல் எரிவாயு மானியத்திட்டத்தை செயல்படுத்த, சமையல் எரிவாயு பெறும் நுகர்வோர்கள் விவரத்தை எல்.பி.ஜி எரிவாயு முகவ ர்களிடம் (ஏஜென்ஸிகள்) பகிர்வதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

    ஆனாலும், காலதாம தத்தைத் தவிர்க்கவும், உடனடியாக திட்டத்தை செயல்படுத்தவும் நுகர்வோர்கள் குறிப்பிட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியில் பிராந்தியம், எரிவாயு முகவர் பெயர், நுகர்வோர் எண், கைபேசி எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் விவரங்களைப் பதிவிடவேண்டும்.

    குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்த இணையதளம், செயலி குறித்த விவரங்களுக்கு உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளளாம். அதற்காக, 9944052612, 9944052718 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்டது.
    • விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்/பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    2-ம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக 3-ம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.3.2023 வரை இருந்த நிலையில் தற்பொழுது 31.3.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
    • www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற

    28-ந் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதையொட்டி கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய 2 தரப்பையும் நேரடியாக இணைத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒரு பாலமாக அமைகின்றன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலை வாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் 28-ந் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம். இது முற்றிலும் இலவச சேவையாகும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 1000-த்திற்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர்(டெக்னிக்கல்) பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.
    • ஆள்சேர்க்கை முகாமுக்கான அனுமதிக் கடிதம் ஆகஸ்டு 14-ந் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும்

    கோவை :

    ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர அக்னிபத் என்ற புதிய திடடத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    17.5 வயது முதல் 23 வயது வரையிலான வயதுள்ள இருபாலரும் முப்படைகளில் சேரலாம். அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்கள்.

    இத்தி ட்டத்தின் கீழ் ஆள்சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கான ஆள்சேர்க்கை முகாம் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் செப்டம்பர் 20-ந் தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கும் ஆள்சேர்க்கை பணி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் அக்னிபத் திட்டத்துக்கான பொதுப்பணி, டெக்னிக்கல், ட்ரேட்ஸ்மேன்(10-ம் வகுப்பு தேர்ச்சி), ட்ரேட்ஸ்மேன்(8-ம்வகுப்பு தேர்ச்சி), கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர்(டெக்னிக்கல்) பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது. வயது, தகுதி, கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இந்த ஆள்சேர்ப்பு முகாமுக்கான இணையவழி பதிவு நேற்று தொடங்கி உள்ளது. ஆள்சேர்க்கை முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்டு 3-ந் தேதி வரை joinindianarmy.nic.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.

    பதிவு செய்தவர்களுக்கு ஆள்சேர்க்கை முகாமுக்கான அனுமதிக் கடிதம் ஆகஸ்டு 14-ந் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும் என கோவையில் உள்ள ராணுவத்துக்கான ஆள்சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக ஆன்லைன் மூலம் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கட்டி முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

    அதாவது, இ-பூஜா, இ-அன்னதானம், இ-ரூம் என்று பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 10 நிறுவனங்கள் இந்த பணிகளை ஒப்பந்தம் மூலம் எடுத்து நடத்தின. ஆன்லைன் மூலம் வசூலாகும் பணத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்தி வந்தன.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்ததாக தெரிகிறது. அதாவது, வசூலாகும் பணத்தை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த நான்கைந்து மாதங்களாக முறையாக கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் ஜெயா விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமும் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இதனால், விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.



    அதாவது, பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் ‘ஸ்கை’ என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத் துறைக்கு பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணம் அரசுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

    இந்த முறைகேடுகளில் அறநிலையத்துறை ஊழியர்களும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, தனியார் நிறுவன அதிகாரிகளிடமும், அறநிலையத் துறை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது.

    இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் அச்சத்தில் உள்ளனர். #tamilnews
    ×