search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு
    X

    ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிப்பு

    • ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்டது.
    • விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்/பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    2-ம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக 3-ம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.3.2023 வரை இருந்த நிலையில் தற்பொழுது 31.3.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×