என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆன்லைனில் நுகர்வோர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
- குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
- மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் சத்திய மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் சமையல் எரிவாயு மானியத்திட்டத்தை செயல்படுத்த, சமையல் எரிவாயு பெறும் நுகர்வோர்கள் விவரத்தை எல்.பி.ஜி எரிவாயு முகவ ர்களிடம் (ஏஜென்ஸிகள்) பகிர்வதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
ஆனாலும், காலதாம தத்தைத் தவிர்க்கவும், உடனடியாக திட்டத்தை செயல்படுத்தவும் நுகர்வோர்கள் குறிப்பிட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியில் பிராந்தியம், எரிவாயு முகவர் பெயர், நுகர்வோர் எண், கைபேசி எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் விவரங்களைப் பதிவிடவேண்டும்.
குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்த இணையதளம், செயலி குறித்த விவரங்களுக்கு உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளளாம். அதற்காக, 9944052612, 9944052718 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






