search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மூலம் பதிவு செய்வதால் கம்ப்யூட்டர் வசதி   செய்து தர வேண்டும்  - சமூக நலத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    ஆன்லைன் மூலம் பதிவு செய்வதால் கம்ப்யூட்டர் வசதி செய்து தர வேண்டும் - சமூக நலத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்

    • ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
    • தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

    உடுமலை:

    சமூக நலத்துறையின் கீழ் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய நிர்வாகத்தில் அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது.

    தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ - சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை. சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால் பலரும் ஒப்புகை சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்து க்கொள்கி ன்றனர். இந்த அலட்சியத்தால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.

    இறுதி நேரத்தில் கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறி கின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர். அனைத்து நலத்திட்ட ங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால் இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது. பயனாளிகளின் விபரங்களை அறியவும், விபரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×