செய்திகள்

நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததி பாட்டிலில்தான் நீரை பார்க்க நேரிடும் - ஐகோர்ட் கண்டனம்

Published On 2019-05-02 09:21 GMT   |   Update On 2019-05-02 10:46 GMT
நீர்நிலைகளை உரிய முறைகளில் பாதுகாக்காவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. #WaterBodies #HighCourt
சென்னை:

மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படட்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிமன்றம் நீர்நிலைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி நீர்நிலைகளை பாதுகாக்கா விட்டால் எதிர்கால தலைமுறையினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க நேரிடும்.



மக்கள் வரிப்பணத்தை இலவசங்களுக்கு செலவிடுவதை விட, அணைகள் கட்டுவதற்காக அந்த நிதியை உபயோகிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை 6 மாதங்களில் அளவிட வேண்டும். நீர்வழித் தடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது #WaterBodies #HighCourt
Tags:    

Similar News