search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் நீதிமன்றம்"

    • மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக, அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

    • ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை.

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகிய இருவர் மீது சென்னை மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    மனுவில், போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஷேக் ஷாஜகானை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் உத்தரவு.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் ஒப்படைக்க இயலாது என பிடிவாதம்.

    மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களிடம் சொத்துகளை மிரட்டி பறித்ததாகவும், நிலத்தை அபகரித்ததாகவும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    குற்றச்சாட்டு எழுந்ததும் ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். சுமார் 55 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் அவரை கைது செய்துள்ளோம் என மேற்கு வங்காள போலீசார் தெரிவித்தனர்.

    ஷேக் ஷாஜகான் தொடர்பான வழக்க மேற்கு வங்காள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்காள உயர்நீதிமன்றம் "மாநில போலீஸ் முற்றிலும் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. நியாயம், நேர்மை மற்றும் முற்றிலுமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைப்பதை விட சிறந்தது ஏதும் இருக்க முடியாது. வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்காள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஷேக் ஷாஜகானை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.

    ஆனால் மேற்கு வங்காள போலீசார், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். ஆகையால் அவரை ஒப்படைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

    இதனால் சிபிஐ போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவசர மனுவாக விசாரிக்க மறுத்துவிட்டது. மேற்கு வங்காள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி-யிடம் சட்டப்படி பதிவாளரிடம் மனுவை குறிப்பிடும்படி நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கு.
    • மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை தேடுகின்றனர்.

    பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப் பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

    மேலும், " நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது பயனாளிகள் தாங்கள் சார்ந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்படாது. நேரமும் மிச்சமாகும்.

    மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர்" என சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி யோசனை தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது.
    • ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால் இது மேலும் குற்றத்தை தூண்டுவதற்கு வகை செய்யும் என நீதிபதி வீரேந்திர சிங் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் இமாச்சல பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு போக்சோ சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டால், வழக்கை ரத்து செய்யலாமா? என்பது முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவித்தது.

    அப்போது நீதிபகள் தர்லோக் சிங் சவுகான், சத்யன் வைத்யா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கூறிய கருத்து பின்வருமாறு:-

    போக்சே சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் திருமணம் செய்து கொள்ள உண்மையிலேயே சமரசத்திற்கு முன்வந்தால், அவர்களின் திருமண வாழ்க்கையை பாதுகாக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யலாம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதிப்பது, உண்மையிலேயே தம்பதியின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். நீதியும் இதரப்பினரை சமரம் செய்து கொள்ள அனுமதிக்க கோரும்.

    ஆனால், தண்டனையில் இருந்து தப்புவதற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு ஒப்புக் கொண்டது அவர் தானாகவே எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. முக்கியமானது, ஒரு குறிப்பிட்ட காரணிகள் அடிப்படையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்பதை நீதிமன்றம் மனதில் கொள்ள வேண்டும்.

    குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் பிரச்சினையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இறுதியில் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைச் சுற்றியே சுழல்கிறது. எனவே, நேரான எந்தவித சூத்திரத்தாலும் உருவாக்க முடியாது.

    இருந்தபோதிலும் பயங்கரமான, கொடூரமான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சமரசத்தின் விசயமாக இருக்க முடியாது.

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
    • பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் கருத்து.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம் செய்தது.

    இந்நிலையில், "ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், " ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம். மக்கள் நலன் தான் மிக முக்கியம். மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருதரப்பு வாதத்தின் முடிவில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

    மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
    • இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார்.

    • வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.
    • கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த 22ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணியளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்க உள்ளார். 

    • நான்கு முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கவில்லை என காவல்துறை தகவல்
    • ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், மாணவி பயன்படுத்திய சொல்போனை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரயிடப்பட்ட உறைகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த விசாரணையானது முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசியதாகவும் ராமலிங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது கேட்டதுடன், செல்போனை ஒப்படைக்காவிட்டால் விசாரணை எப்படி நிறைவடையும்? என்று கேள்வி எழுப்பனார். மேலும் மாணவி பயன்படுத்திய செல்போன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.

    இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதாரம் இருந்தும் அதை மறைத்தால் அது சட்டப்படி குற்றம் என்றும், அதற்காக விசாரணை நடத்தும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

    • வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம்.
    • ஆட்சிமாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? என நீதிமன்றம் கேள்வி

    சென்னை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான 48 பக்க தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. முறைகேடு நடந்ததாக நேரடியாக வழக்கு பதியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் தவறால் அல்லாமல் வேலுமணி செல்வாக்கால் முறைகேடு நடந்ததாக நிரூபித்திருந்தால் வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க மாட்டாது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தால் அவரை வழக்கில சேர்க்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது ஏன்? 

    அரசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் தலையீட்டில் இருந்து காவல்துறையை விடுவிக்க வேண்டும்.

    தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதால் ரத்து செய்ய முடியாது, என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.
    • தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக தகவல்.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது.

    ×