செய்திகள்

அரசியல் கட்சியினரின் போராட்டத்தால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2018-03-21 08:04 GMT   |   Update On 2018-03-21 08:04 GMT
ராமர் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால்தான் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் பா.ஜனதாவின் கட்சி அலுவலகம், நிர்வாகிகள் இல்லத்தில் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. தற்போது மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.

இதில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒருமுறை அல்ல, தொடர்ந்து நடந்து வருகிறது.

ராம ரத யாத்திரைக்கு மக்கள் அமோக வரவேற்பு தந்து உள்ளனர். ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் ரத யாத்திரையால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வரும் என்று சொல்கிறார்கள். ரதத்தினால் பாதிப்பு இல்லை. இவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான் பாதிப்பு.

ராமர் ரத யாத்திரை அரசு அனுமதி பெற்று அமைதியாக நடைபெறுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இல்லை.

அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால்தான் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது.

பெரியார் சிலையை உடைப்பதில் எங்களுக்கு எந்த விதத்திலும் ஒப்புதல் கிடையாது. ஏற்கனவே இதை செய்த எங்கள் கட்சி நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். யார் எதை செய்தாலும் பா.ஜனதாதான் காரணமா?

சி.ஆர்.பி.எப். வீரர் பெரியார் சிலையை உடைத்து இருக்கிறார். திராவிட கட்சிகள் கொண்டு வந்த டாஸ்மாக்கினால்தானே அவர் குடித்து விட்டு இதை செய்து இருக்கிறார்.

ஸ்டாலின் தொடர்ந்து பா.ஜ.க. மீது தவறான கருத்து கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News