search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சியினர்"

    • தி.மு.க. சார்பில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை
    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மரியாதை

    நாகர்கோவில் :

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தி.மு.க. சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகி களும் மலர்தூவி மரியாதை செலுத்தி னார்கள். குமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மரியாதை செலுத்தினார். இதில் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாநகர செயலாளர் அனிஷ், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் சுவாமி நாடார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா
    • அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

    நாகர்கோவில் :

    பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து வேப்பமூட்டில் உள்ள அவரது சிலைக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சிலதா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவகர், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் உரிமை களுக்காக போராடிய பல தலைவர்கள் வாழ்ந்து ள்ளனர். இதில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பொது வுடமை வீரர் ஜீவா. ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். அவருடைய எழுத்துக்களாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். தமிழக அரசு கடந்த 2½ ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண் டுள்ளது.

    சுற்றுலாத்துறை இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.200 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி யிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக பஸ் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலை யங்கள், வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆளுநரை பொறுத்தமட்டில் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசை மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுநர் எல்லை மீறி செயல்படுகிறார். நீட் தேர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படு வார்கள் என்பதற்காக தி.மு.க. அரசு இதை எதிர்த்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வட இந்தி யாவிலும் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க. போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் விஜய் வசந்த் எம்.பி. ஜீவா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் மண்டல தலைவர்கள், சிவபிரபு, செல்வன், கவுன்சிலர்கள் பால்அகியா, அனிஷா பிரைட், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சகாய பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அகமது உசேன், மாநகர செயலாளர் மோகன், மாநகர் குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் நிர்வாகி கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயி னார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ்- பா.ஜனதா

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், உதயக்குமார், கவிப்பாண்டி யன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், கெங்கராஜ், அய்யப்பன், ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் மணி, வண்ணை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

    நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயி னார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் மகா ராஜன், நிர்வாகிகள் நாகராஜன், மார்க்கெட் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தே.மு.தி.க.

    தே.மு.தி.க. சார்பில் அம்பேத்கர் சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணைப்பொது செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர இளைஞரணி செய லாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • பரமக்குடியில் வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
    • தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.முத்தையா, சதன்பிரபாகர், பரமக்குடி நகர செயலாளர் ஜமால் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர், மாவட்ட பொதுச் செயலாளர் ரபீக் அகமது, மாநில பேச்சாளர் ஆலம், மாநில நெசவாளர் அணி கோதண்டராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    தர்மர் எம்பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடலாடி முன்னாள் ஒன்றிய செயலாளர் மூக்கையா, பேரூர் செயலாளர் சதீஷ், கடலாடி ஒன்றிய செயலாளர் சண்முக பாண்டியன், வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், பரமக்குடி வின்சென்ட் ராஜா, நயினார் கோயில் வக்கீல் நவநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், கொடிக்குளம் சத்தியேந்திரன், கரைமேல் குடியிருப்பு சேதுராமன் உள்பட பலர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதன் பின்பு தர்மர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் ஆணி வேராக திகழும் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர்செல்வம் பின்னால் தான் உள்ளனர். அ.தி.மு.க.விற்கு அவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சேர்க்கலாமா? என்பது குறித்து தலைமைதான் முடிவு செய்யும். தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் பா.ஜ.க.விற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சோலைராஜா, சரவணன், தினேஷ்குமார், சிவா தேவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×