செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 15 நாளில் விளக்கம் அளிக்க தமிழக அரசு நோட்டீஸ்

Published On 2017-09-14 07:35 GMT   |   Update On 2017-09-14 07:35 GMT
காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாளில் விளக்கம் அளிக்க தமிழக அரசு 2 விதமான நோட்டீஸ் அளிக்க உள்ளது.

சென்னை:

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு 2 விதமான நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

17-ஏ என்ற நோட்டீசில் அரசு விதியின்படி போராட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள், அதற்கான தகுந்த காரணத்தை விளக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் அதற்கு பதில் அளிக்க வேண்டும்.

17பி நோட்டீஸ் மிக கடுமையாக இருக்கும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறு தவறுகளுக்கு 17ஏ-ம், பெரிய தவறுகளுக்கு 17பி-ம் அரசு விதிகளின்படி தண்டனை வழங்கப்படும். அதிகபட்சமாக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யவும் வழி வகுக்கும்.

தமிழ்நாடு குடிமை பணிகள் ஒழுக்கம் மற்றும் மேல்முறையிட்டு விதிகள்படி இந்த நடவடிக்கை அமையும்.

போராட்டத்தில் ஈடுபட்ட உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஊழியர்கள் தரும் விளக்கத்தை பொறுத்துதான் நடவடிக்கை இருக்கும்.

விளக்கம் தரவில்லை என்றாலோ, காரணம் சரியில்லை என்றாலோ நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தற்போது இந்த பிரச்சினை நீதிமன்றத்திற்கு சென்று விட்டதால் அரசு நிர்வாகம் முடிவு எடுக்க முடியாது. கோர்ட்டு உத்தரவு படிதான் நடவடிக்கை இருக்கும் என்றார்.

Tags:    

Similar News