இந்தியா

2 நாய்க்குட்டிகளை கொலை செய்த முதியவர் - சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை

Published On 2024-05-18 15:26 GMT   |   Update On 2024-05-18 15:26 GMT
  • நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
  • இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் சாரதா நகர் பகுதியில் வசிக்கும் முதியவர் 2 நாய்க்குட்டியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த மனிதாபிமானமற்ற செயல் முதியவரின் பக்கத்து வீட்டிற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நிஷா திவாரி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், "லக்னோ, சாரதா நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீவஸ்தவா என்ற முதியவர், மதியம் 2 நாய்க்குட்டிகளை அக்கம் பக்கத்தில் இருந்து எடுத்தார். பின்னர் அவர் அவற்றை வீட்டிற்குள் கொண்டு சென்றார். அங்கு நாய்குட்டிகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவர் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மே 15 மாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. லக்னோ போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News