செய்திகள்

நாட்டிலேயே முதன் முறையாக பறக்கும் ஆம்புலன்ஸ்: கோவை தனியார் மருத்துவமனையில் அறிமுகம்

Published On 2017-06-23 19:15 GMT   |   Update On 2017-06-23 19:15 GMT
நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை வரும் 25-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
கோவை:

நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. அவசர சிகிச்சை, நோயாளியின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் அடங்கியுள்ளது.

1992-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எடுத்துச் செல்லவும், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரவும் பயன்பட உள்ளது. டெல்லியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனத்திடமிருந்து இரண்டாண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு மணிநேரம் ஹெலி ஆம்புலன்சை பயன்படுத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News