search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தலை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை- கனிமொழி எம்பி பேச்சு
    X

    இடைத்தேர்தலை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை- கனிமொழி எம்பி பேச்சு

    தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று கருங்கல் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #kanimozhi #dmk #byelection

    கருங்கல்:

    தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    கருங்கல்லில் இரவு நடந்த தி.மு.க. அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழக மக்கள் இன்று பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். மத்தியில் ஓரு மதவாத அரசு, மாநிலத்தில் ஒரு மக்கள் விரோ ஆட்சி. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி மீண்டும்ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என நினைத்து பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா. அதற்கு ஊதுகுழலாக தமிழக அரசும் ஜால்ரா போடுகிறது. இவர்களுக்கு மக்களை பற்றி எந்த அக்கறையும் கிடையாது.

    ஆட்சியை பிடிப்பதிலும், இருக்கும் ஆட்சியை தக்கவைப்பதை பற்றியும் மட்டுமே அவர்கள் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலைஞரின் தலைமையில் இருந்த அரசு மக்களுக்காக பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியது. அதேபோல மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்கான பல திட்டங்களை செயல்படுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அரசு விரைவில் அகற்றப்படும். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் என உறுதியாக கூற முடியாது. அதனை நடத்தும் தைரியம் ஆட்சியாளர்களுக்கு இல்லை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. அப்போது உங்களுக்காக பணியாற்ற தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் சத்தியராஜ், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #kanimozhi #dmk #byelection

    Next Story
    ×