search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.சி. அறைகளில் வாழ்பவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயின் அருமை தெரியாது- மோடி காட்டம்
    X

    ஏ.சி. அறைகளில் வாழ்பவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயின் அருமை தெரியாது- மோடி காட்டம்

    விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 6 ஆயிரம் ரூபாயின் அருமை டெல்லியில் ஏ.சி. அறைகளில் வாழ்பவர்களுக்கு நிச்சயமாக தெரியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Rs6000forarmer #ModiinKashmir
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி லே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தைப்பற்றி குறிப்பிட்டு பேசிய மோடி, ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தை நான் தொடங்கி வைத்தபோது என்னை பலர் கேலி செய்தனர்.

    இப்போது, அந்த வங்கி கணக்குகள் விவசாயிகள் உதவித்தொகை பெறுவதற்காக பயன்படப் போகிறது. இனி நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.75 ஆயிரம் கோடி போய் சேரும்.

    இந்த திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் குறைசொல்லி வருகின்றனர். விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 6 ஆயிரம் ரூபாயின் அருமை டெல்லியில் ஏ.சி. அறைகளில் வாழ்பவர்களுக்கு நிச்சயமாக தெரியாது. இந்த தொகை நாட்டின் கடைக்கோடியில் வாழும் ஏழை விவசாயிகளுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கும்? என்பது அவர்களுக்கு புரியாது.


    காங்கிரஸ் கட்சியினர் தேர்தல்கள் வரும் வேளைகளில் மட்டும் விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி பேசி வருகின்றனர்.  6 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்த அவர்கள் வெறும் 52 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே தள்ளுபடி செய்தனர் என மோடி தெரிவித்தார். #Rs6000forarmer #ModiinKashmir
    Next Story
    ×