search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.

    பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க.வினர் மீது உள்ளது. எனவே தவறு செய்பவர்கள், திருடக்கூடியவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். யார் சிறைக்கு போவார்கள் என்று விரைவில் தெரியும்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சோந்தி, அவரது கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை. சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தில் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    வருகிற பாராளுமன்ற தேர்தல்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அது குறித்து முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அதிகாரப்பூர்வ குழு அமைத்து பேசுவார்கள்.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை துறை ரீதியில் அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து நின்று வெற்றி பெற தேவையில்லை.

    தேர்தல் வியூகங்கள் வகுத்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்து மேலிடம் முடிவு செய்யும்.

    கஜா புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தீவிரமாக செய்துள்ளது.

    மத்திய அரசு உதவியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சி சார்பிலும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    ரேசன் கடைகளில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju
    Next Story
    ×