search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 46 பவுன் நகை ஆசிரியையிடம் ஒப்படைப்பு
    X

    கொள்ளை கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 46 பவுன் நகை ஆசிரியையிடம் ஒப்படைப்பு

    முத்துப்பேட்டை அருகே கொள்ளை கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 46 பவுன் நகையை ஆசிரியையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மற்றும் எடையூர், பெருகவாழ்ந்தான் பகுதிகளில் கடந்தாண்டு, தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் இலங்கேஸ்வரன், ஜெயந்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    பின்னர் அவர்களின் ரேகைகளை பதிவு செய்துவிட்டு அனுப்பி வைத்தனர். மறுநாள் கைரேகைகளை ஆய்வு செய்தபோது திருட்டு, கொள்ளை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர்கள் எடையூர் சிவதாஸ், பெருகவாழ்ந்தான் சுப்ரியா, சப்- இன்ஸ்பெக்டர்கள் இலங்கேஸ்வரன், ஜெயந்தி, ராஜூ, ஏட்டுகள் கண்ணன், பிரகாஷ், பாஸ்கரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.இதில் தம்பிக்கோட்டை மேலக்காடு சதீஷ்குமார்(26), பாலமுருகன்(24), கார்த்திக்(23), மன்னார்குடி ராஜேஷ் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    விசாரணையில் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை இந்திரா வீடு, மாதவன் மளிகை கடை, ராஜேந்திரன் உரக்கடை, பாண்டி, பெருகவாழ்ந்தான், பேராவூரணி பகுதிகளில் உள்ள கடைகள், வீடு ஆகிய இடங்களில் திருடியது தெரிந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 64 பவுன் நகைகள், 18 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்த 46 பவுன் நகைகளை எடையூர் ஆசிரியை இந்திராவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எடையூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி முன்னிலையில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் நகைகளை இந்திராவிடம் வழங்கினர். நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×