search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery gang"

    • காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 130 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் காலை உணவு செய்வதற்கான சமையலறை உள்ளது.

    சமையல் பொருட்கள் திருட்டு

    அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரவா உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா, வெண் பொங்கல், ரவா பொங்கல், கோதுமை ரவா உப்புமா, காய்கறிச் சாம்பார் போன்ற உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதற்காக பள்ளி சமையல் அறையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சமையல் கூடத்தின் கதவு, ஜன்னல் உள்ளிட்வைகளை இடித்து உள்ளே புகுந்து அங்கு வைத்திருந்த கியாஸ் சிலிண்டர், அரிசி, பருப்பு, முட்டை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட சமையல் பொருட்கள் அனைத்தையும் திருடி சென்றனர்.

    இன்று காலை உணவு சமையல் செய்வதற்கு எந்த பொருட்களும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று பார்த்தபோது சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் மர்ம கும்பல் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தனிகாசலம், காடையாம்பட்டி தாசில்தார் மாதேஸ்வரன், ஓமலூர் தாசில்தார், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் புகுந்து சமையல் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். எனவே பெற்றோர் அமைதி காக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என சமாதானப்படுத்தினார்கள். 

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சக்திவேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவருடைய மனைவி அலமேலுமங்கை (வயது 49). ஊத்துக்குளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்–டும் நேற்று காலை வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. ஆசிரியை அலமேலுமங்கை வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்துக்குளி ேபாலீஸ் நிலையத்தில் அலமேலுமங்கை புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாராபுரம் அலங்கியம் சாலை என்.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ராஜதுரை ( 36). இவர் மாநில வணிக வரி அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 21-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற ராஜதுரை மாலையில் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜதுரை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், முகையூர், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய்கொண்டுள்ளது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டது. இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போன இடங்களை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து எந்தெந்த செல்போன் எண்கள் அப்பகுதிகளில் வந்து சென்றன என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தனிப்படைக்கு தெரி யவந்தது. சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    அதன்படி காணை அடுத்துள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ேபாலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்று சென்னையில் விற்பதாகவும், இது கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தபடும் என்று தெரியவந்தது. மேலும், பிடிபட்ட வாலிபர்கள் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாவர். இவர்களும் போதைப் பொருட்களை உட்கொண்ட பிறகே அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இந்த 4 வாலிபர்களும் ஒன்றினைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ்அதிவேக மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கும்பலிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.

    சூலூர், ஜூன்.5-

    சூலூர் போலீசார் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்த கும்பலை சேர்ந்த மருதாசலம் (வயது 36), அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), கோவில்பாளையம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்கிற நட்டூரான் (51) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. .இந்த சிறப்பு படையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் , ஏட்டு மகாராஜன் உளவுப்பிரிவு போலீஸ் சந்துரு மற்றும் போலீசார் முத்துக்கருப்பன், செல்லப்பாண்டி, பழனி குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

    கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற அனைத்து திருட்டு வழக்குகளிலும் கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை சூலூர் போலீசார் மீட்டனர்.

    இதையடுத்து போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேரில் சென்று பாராட்டி, பரிசு வழங்கினார். பின்னர் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பொன்னேரியில் காரில் வந்து கொள்ளை அடித்த 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் காலனியில் வசித்து வருபவர் ஆனந்தன். வீட்டு முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டுவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் 4 பேர் கும்பல் காரில் வந்தனர். திடீரென அவர்கள் ஆனந்தனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

    சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களின் ஒருவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிப்பட்ட வாலிபர் சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் என்பது தெரிந்தது. அவனை பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் கத்தி, கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    தப்பியோடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட பூபாலனிடம் விசாரணை நடந்து வருகிறது.
    தேனி அருகே கோவில் உண்டியலை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் புலிக்குத்தி கிழக்குத் தெருவில் பெருமாள் சாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் கோவிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் கோவில் உண்டியலை பணத்துடன் திருடிச் சென்றது.

    மறுநாள காலை கோவிலுக்கு வந்த நிர்வாக குழுவினர் உண்டியல் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    தேனி அருகே வீரபாண்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 21) இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    தேனி அருகே வீரபாண்டி வயல்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 45). இவரது மனைவி வீரமணி (வயது 39). இருவரும் அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு தேனி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    ஜக்கம்மாள் கோவில் அருகே வந்த போது இவர்களை பைக்கில் பின் தொடர்ந்த கொள்ளையர்கள் வீரமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் கர்ணன் செல்போனையும் பறிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பிடித்துக் கொண்டதால் கொள்ளையர்கள் பதட்டமடைந்து தப்பி ஓட முயன்றனர்.

    இதில் தம்பதிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். படுகாயமடைந்த கர்ணன் மற்றும் வீரமணி தேனி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே நகை, பணத்தை தராததால் கணவன்-மனைவியை வெட்டிய முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள செம்பட்டி பாறைப்பட்டியை சேர்ந்தவர் மாயப்பன் (வயது50). விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள் (45). இவர்களுக்கு சசிகுமார் (15) என்ற மகனும் சிவசத்தியா (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாரியப்பன் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது இருட்டான பகுதியில் சிலர் நிற்பதை பார்த்து யார்? என கேட்டார். ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. தனது கணவர் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பேச்சியம்மாள் வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 5 பேர் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    பேச்சியம்மாளிடம் அவர் அணிந்த நகைகளை கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே அரிவாளால் அவரை வெட்டினர். இதை தடுக்க வந்த கணவர் மாயப்பனையும் அரிவாளால் வெட்டினர்.

    தனது பெற்றோர்கள் அலறல் சத்தம்கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சசிக்குமார் வெளியே வந்தார். அவரை கீழே தள்ளி விட்டு கொள்ளை கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    ×