என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்னேரி கொள்ளை"

    பொன்னேரியில் காரில் வந்து கொள்ளை அடித்த 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் காலனியில் வசித்து வருபவர் ஆனந்தன். வீட்டு முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டுவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் 4 பேர் கும்பல் காரில் வந்தனர். திடீரென அவர்கள் ஆனந்தனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

    சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களின் ஒருவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிப்பட்ட வாலிபர் சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் என்பது தெரிந்தது. அவனை பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் கத்தி, கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    தப்பியோடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட பூபாலனிடம் விசாரணை நடந்து வருகிறது.
    பொன்னேரி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம், அங்கம்மாள் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரும்பேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் பட்டப்பகலில் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொன்னேரி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி பரஸ்மால் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.

    தேவம்பட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது காட்டாவூர் சாலை அருகே 2 மர்ம நபர்கள் விஜயகுமாரை வழி மறித்தனர்.

    அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 3 பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணி, காட்டாவூர் குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×