search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி-தாராபுரத்தில் ஆசிரியை-வணிகவரி அலுவலக உதவியாளர் வீட்டில் கொள்ளை
    X

    கோப்புபடம்

    ஊத்துக்குளி-தாராபுரத்தில் ஆசிரியை-வணிகவரி அலுவலக உதவியாளர் வீட்டில் கொள்ளை

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
    • புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சக்திவேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவருடைய மனைவி அலமேலுமங்கை (வயது 49). ஊத்துக்குளி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்–டும் நேற்று காலை வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. ஆசிரியை அலமேலுமங்கை வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்துக்குளி ேபாலீஸ் நிலையத்தில் அலமேலுமங்கை புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியை வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாராபுரம் அலங்கியம் சாலை என்.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ராஜதுரை ( 36). இவர் மாநில வணிக வரி அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 21-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற ராஜதுரை மாலையில் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜதுரை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×