search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பாராட்டு"

    • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் தவறி விழுந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.சென்னை பெருங்குடியைச்சேர்ந்த பாக்யராஜ் (45). டீ தூள் வியாபாரி. இவர் வியாபாரம் நிமித்தமாக ஊட்டி செல்ல திட்டமிட்டார்.

    அதன்பேரில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் பயணித்து மேட்டுப்பாளையம் வந்து இறங்கிய அவர் பின்னர் ஊட்டி செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ெரயில் வரும் போது அசதியில் அவர் உறங்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது, அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் ெரயிலில் உள்ள நடைபாதையில் தவறி விழுந்து உள்ளது. இதனை அவர் கவனிக்கவில்லை. அப்போது ரோந்துப்பணியில் இருந்த ெரயில்வே காவலர் முருகன் அப்பணத்தை மீட்டு மேட்டுப்பாளையம் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம் ஒப்படைத்தார்.இந்த நிலையில் பணம் தவற விட்டது குறித்து அறிந்த ெரயில் பயணி பாக்கியராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து ெரயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ெரயில் பயணி பாக்யராஜிடம் விசாரித்த பின்னர் அந்த பணத்தினை பத்திரமாக மேட்டுப்பாளையம் ெரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

    ெரயிலில் பயணி தவற விட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    • ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சா லையில் இரவு நேரங்களில் அதிக அளவில் கார் மற்றும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள். இதனால் வேப்பூர் பகுதியில் கோர விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேப்பூர் கூட்ரோட்டில் வாகனங்க ளை ஆய்வு செய்தார். அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற 16 லாரிகளை மடக்கிப்பிடித்து வழக்கு பதிவு செய்து அந்த வாகனங்களை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் கார்களில் செல்பவர்களை நிறுத்தி மது போதையில் செல்கிறார் களா என்றும் காரின் ஆவ ணங்களை சரி பார்த்தும் வாகன ஓட்டிகளுக்கு மது போதையில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின் போது திட்டக்குடி துணை சூப்பி ரண்டு காவ்யா, இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வந்து இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடு படுவதை அறிந்த பொது மக்கள், அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.

    • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
    • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

    கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

    • நெடுஞ்சாலை பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள் ளது.
    • கடந்த 3 நாட்களாக, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகு திகளில், தோண்டப்பட்டு சரிவர மூடாத குழிகளை, முதியவர் ஒருவர், மண் மற்றும் கற்களை கொட்டி மூடி வரு கிறார்.

    பாலக்கோடு,

    பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 18 வார்டுகளிலும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க குழாய்கள் பதிக்கப்பட்டது.

    தற்போது வரை வார்டு மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள் ளது.

    இதனால், அந்த வழியாக செல்லும் ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால், சாலை சீர மைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகு திகளில், தோண்டப்பட்டு சரிவர மூடாத குழிகளை, முதியவர் ஒருவர், மண் மற்றும் கற்களை கொட்டி மூடி வரு கிறார்.

    பெரிய குழிகளின் அருகே வாகனங்கள் சென்று விபத்து ஏற்படாமல் இருக்க, பெரிய கல் வைத்து தடுப்பு அமைக்கிறார் .

    அதேபோல் குப் பைகளை அள்ளி சென்று கொட்டினார். இந்த முதிய வரின் சமூக பணியை, பொது மக்கள் பலரும் பாராட்டினர்.

    ×