search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு பஞ்சாயத்தில்   அரசு செய்ய வேண்டிய பணிகளை தானே முன்வந்து செய்யும் முதியவர்-   பொதுமக்கள் பாராட்டு
    X

    சாலையை சீரமைத்த முதியவர்.

    பாலக்கோடு பஞ்சாயத்தில் அரசு செய்ய வேண்டிய பணிகளை தானே முன்வந்து செய்யும் முதியவர்- பொதுமக்கள் பாராட்டு

    • நெடுஞ்சாலை பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள் ளது.
    • கடந்த 3 நாட்களாக, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகு திகளில், தோண்டப்பட்டு சரிவர மூடாத குழிகளை, முதியவர் ஒருவர், மண் மற்றும் கற்களை கொட்டி மூடி வரு கிறார்.

    பாலக்கோடு,

    பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள, 18 வார்டுகளிலும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க குழாய்கள் பதிக்கப்பட்டது.

    தற்போது வரை வார்டு மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள் ளது.

    இதனால், அந்த வழியாக செல்லும் ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால், சாலை சீர மைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் பகு திகளில், தோண்டப்பட்டு சரிவர மூடாத குழிகளை, முதியவர் ஒருவர், மண் மற்றும் கற்களை கொட்டி மூடி வரு கிறார்.

    பெரிய குழிகளின் அருகே வாகனங்கள் சென்று விபத்து ஏற்படாமல் இருக்க, பெரிய கல் வைத்து தடுப்பு அமைக்கிறார் .

    அதேபோல் குப் பைகளை அள்ளி சென்று கொட்டினார். இந்த முதிய வரின் சமூக பணியை, பொது மக்கள் பலரும் பாராட்டினர்.

    Next Story
    ×