search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public appreciation"

    • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சா லையில் இரவு நேரங்களில் அதிக அளவில் கார் மற்றும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு சில டிரை வர்கள் இரவு நேரத்தில் குடி போதையில் வாகனத்தை ஓட்டி வருகின்றார்கள். இதனால் வேப்பூர் பகுதியில் கோர விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேப்பூர் கூட்ரோட்டில் வாகனங்க ளை ஆய்வு செய்தார். அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற 16 லாரிகளை மடக்கிப்பிடித்து வழக்கு பதிவு செய்து அந்த வாகனங்களை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் கார்களில் செல்பவர்களை நிறுத்தி மது போதையில் செல்கிறார் களா என்றும் காரின் ஆவ ணங்களை சரி பார்த்தும் வாகன ஓட்டிகளுக்கு மது போதையில் செல்லக் கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இந்த ஆய்வின் போது திட்டக்குடி துணை சூப்பி ரண்டு காவ்யா, இன்ஸ் பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக வந்து இரவு நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடு படுவதை அறிந்த பொது மக்கள், அவருக்கு பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.

    பட்டுக்கோட்டை அருகே ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். #OldWoman #Youngsters
    பட்டுக்கோட்டை:

    பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த ‘நண்பன்“ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் உயிருக்கு போராடும் ஜீவாவின் தந்தையை விஜய் ஸ்கூட்டரில் உட்கார வைத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

    இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோவில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்த விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசிவிசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு (வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார்.

    படிக்கட்டுகள் வழியாக குளத்திற்குள் இறங்கி அங்குள்ள படிக்கட்டில் நின்று கொண்டு அந்த மூதாட்டி கை, கால்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார்.

    நீண்ட நேரம் குப்புற கிடந்த அந்த மூதாட்டியை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் குளத்திற்குள் இறங்கி அவரை மீட்டு வந்து குளத்தின் கரையில் போட்டனர். அவர் இறந்து விட்டார் என்று திகைத்து நின்றபோது மூதாட்டியின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 23), ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்தனர். ஆனால் யாரும் அந்த மூதாட்டியை ஏற்றிச்செல்ல வரவில்லை.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒரு கணம் திகைத்தனர். ஆனால் மறுகணமே சுதாரித்துக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மற்றொருவர் அந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.

    உடனே மோட்டார் சைக்கிளை இயக்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் அந்த மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சரியான நேரத்தில் சேர்த்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார்.

    உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றதால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்கு காரணமாக இருந்த அந்த இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.  #OldWoman #Youngsters
    ×