search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்துப்பேட்டை"

    • அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகர் அருகே செல்லும் மாமணி ஆற்றில் மர்மநபர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈ.சி.ஆர். சாலையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சங்கீதா, மகள் சிந்து. கண்ணன் திருத்துறைப்பூண்டி போலீசில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், கண்ணன் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில்அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சங்கீதா கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட சுமார் 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சங்கீதா, கண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மர்மநபர்கள் அலையாத்தி காட்டுக்குள் இருப்பதாக தெரிந்தது.

    தொடர்ந்து, முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து வந்த ஏராளமான போலீசார் அலையாத்திகாடுக்குள் படகு மூலம் சென்று தேடினர்.

    பின்னர், நள்ளிரவில் அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்.கே. நகர் அருகே செல்லும் மாமணி ஆற்றில் மர்மநபர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அடுத்த மேல சொக்கநாதபுரம் வினோபா காலனி பகுதியை சேர்ந்த தர்மதுரை (வயது 20), போடிநாயக்கனூர் அடுத்த அணைக்கரை காந்தி சாலை பகுதியை நல்ல தம்பி (27) என்பது தெரியவந்தது.

    இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×