search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்மலில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு
    X
    பம்மலில் கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு

    மனைவி - குழந்தைகளை கஷ்டப்படுத்தி விட்டேன் - ஜவுளி வியாபாரி உருக்கமான கடிதம்

    தாய், மனைவி, மகன், மகளை கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜவுளி வியாபாரி தாமோதரன் விபரீத முடிவு எடுக்கும் முன் வீட்டில் தன் கைப்பட 5 பக்க கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதை போலீசார் கைப்பற்றினர்.

    தாய், மனைவி, மகன், மகளை கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜவுளி வியாபாரி தாமோதரன் விபரீத முடிவு எடுக்கும் முன் வீட்டில் தன் கைப்பட 5 பக்க கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தாமோதரன் உருக்கமான முறையில் எழுதியிருப்பது தெரிய வந்தது. கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஜவுளி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். இதில் தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நஷ்டத்தை சரிக்கட்ட கடன் வாங்கினேன். அதன் பிறகும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாததுடன் கடன் தொல்லையும் அதிகரித்தது.

    என்னிடம் கடன் வாங்கிய வர்களும் அதை திருப்பித் தரவில்லை. இதனால் ஜவுளி வியாபாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் குழந்தைகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அவர்களை கஷ்டப்படுத்தி விட்டேனே என்று மனம் உறுத்தியது. நான் மட்டுமே தற்கொலை செய்ய திட்ட மிட்டேன். ஆனால், நான் இறந்த பிறகும் அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ப தால் குடும்பத்துடன் சாக முடிவு எடுத்தேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஜவுளி வியாபாரி தனது குடும்பத்தையே கொலை செய்யும் அளவுக்கு சென்ற தால் அவருக்கு யாரும் நெருக் கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    யார் - யார் கடன் கொடுத் தார்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் யார்? என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×