search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
    X

    விஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

    சிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியிருக்கிறது. #Viswasam #AjithKumar
    அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் சிங்களை நேற்று வெளியானது.

    `அடிச்சு தூக்கு' என தொடங்கும் அந்த பாடலை டி.இமான் இசையமைத்து பாடியிருக்கிறார். சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை 4 கோடிக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளர்.

    இந்த நிலையில், படத்தின் கர்நாடக தியைரங்கு உரிமையை ஸ்டுடியோ ஹாரிசான் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.


    அஜித் இந்த படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படம் 2019 பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara #ViswasamPongal2019 #ViswasamThiruvizha #AdchiThooku

    Next Story
    ×