என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`கபாலி', `பாகுபலி-2' வரிசையில் `மெர்சல்' படத்திற்கு கிடைக்கும் புதிய அந்தஸ்து
Byமாலை மலர்4 Oct 2017 3:33 AM GMT (Updated: 4 Oct 2017 3:33 AM GMT)
`கபாலி', `பாகுபலி-2' பட வரிசையில் விஜய் நடித்து வரும் `மெர்சல்' படத்திற்கு புதிய அந்தஸ்து ஒன்று கிடைக்கவிருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் படம் `மெர்சல்'.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மெர்சல் படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.
படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், படத்தின் வியாபாரமும் சூடுபடித்துள்ளது.
இந்நிலையில், மெர்சல் படத்திற்கு புதிய அந்தஸ்து ஒன்றும் கிடைக்கவிருக்கிறது. அது என்னவென்றால், ஐரோப்பாவின் மாபெரும் திரையரங்கமான பாரீசின் `லீ கிராண்ட் ரெக்ஸ்' (Le Grand Rex) திரையரங்கில் மெர்சல் படம் திரையிடப்பட இருப்பதாக `லீ கிராண்ட் ரெக்ஸ்' அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் 'லீ கிராண்ட் ரெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படமாக ரஜினியன் 'கபாலி' படம் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து `பாகுபலி-2' படம் திரையிரப்பட்டது.
இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்' படத்திற்கு அந்த அந்தஸ்து கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லீ கிராண்ட் ரெக்ஸ் கபாலி பாகுபலி 2 மெர்சல் டீசர் மெர்சல் மெர்சல் விஜய் தளபதி விஜய் அட்லி விஜய் சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு சத்யன் கோவை சரளா சுனில் மிஷா கோஷல் யோகி பாபு ஹரீஷ் பேரடி மொட்டை ராஜேந்திரன் atlee vijay samanthaa kajal aggarwal nithya menon vijay 61 Thalapathy 61 mersal mersal vijay sj suriyah sathyaraj vadivelu sathyan yogi babu kovai sarala aalaporan tamizhan kabali baahubali 2 Le Grand Rex
Next Story
×