search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சூப்பர் ஸ்டாரின் எளிமை வியக்க வைக்கிறது: `காலா நடிகை ஹுமாகுரேஷி
    X

    சூப்பர் ஸ்டாரின் எளிமை வியக்க வைக்கிறது: `காலா' நடிகை ஹுமாகுரேஷி

    சூப்பர் ஸ்டாரின் எளிமை தன்னை வியக்க வைப்பதாக `காலா' படத்தில் அவருடன் நடித்து வரும் நாயகிகளில் ஒருவரான நடிகை ஹுமாகுரேஷி கூறியிருக்கிறார்.
    ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘கபாலி’ போலவே ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

    இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

    இதில் ரஜினியுடன் நடிப்பது குறித்து கூறிய ஹுமாகுரேஷி....

    “ரஜினி சாருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவரது எளிமை என்னை வியக்க வைக்கிறது. அவர் நடந்தால் அனைவரும் அவருக்கு அமைதியாக வழி விடுவார்கள்.



    ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு எளிமையாக இருப்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை. ரஜினி அருகே அசையாமல் மரம் போல நிற்க வைத்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன். அவ்வளவு சிறந்த மனிதர் அவர். ஆனால் ‘காலா’ எனக்கு ஸ்பெ‌ஷல் படம். காரணம், இது ரஜினி சார் படம். இதில் இயக்குனர் ரஞ்சித் எனக்கு பெரிய வேடம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

    சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
    Next Story
    ×