என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆனந்தி ராசியான வெற்றி பட நாயகி: கிருஷ்ணா
Byமாலை மலர்17 July 2017 11:52 AM GMT (Updated: 17 July 2017 11:52 AM GMT)
நடிகை ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி என்று பண்டிகை படத்தில் அவருடன் நடித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.
கிருஷ்ணா- கயல் ஆனந்தி ஜோடி சேர்ந்து நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‘பண்டிகை’. இதுபற்றி கூறிய கிருஷ்ணா...
“ ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை ‘பண்டிகை’ படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த கதை என் திரைஉலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். அன்பு, அறிவு என்ற இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை தரும்.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி. ‘பண்டிகை’ மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும். சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்ப்பார். அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இசையமைப்பாளர் ஆர்.எச். விக்ரம் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டி இருக்கிறார்.
இதன் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் கடந்து அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட அக்கறை, அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ‘பண்டிகை’ படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப்படும் என்பது நிச்சயம்” என்றார்.

ஆரா சினிமாஸ் கிருஷ்ணா பண்டிகை ஆனந்தி பெரோஸ் ஜி.எஸ்.டி கேளிக்கை வரி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் சரவணன் நிதின் சத்யா கருணாஸ் ப்ளாக் பாண்டி சபரிஷ் மதுசூதனன் அருள்தாஸ் Festival of Gangsters PANDIGAI Krishna Anandhi GST Entertainment Taxes Theater Owners Strike Saravanan Nitin Sathya Karunas Black Pandey Sabarish Madhusudhanan aruldoss PANDIGAI auraa cinemas
Next Story
×