என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`பண்டிகை'யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்
Byமாலை மலர்17 July 2017 5:09 AM GMT (Updated: 17 July 2017 5:09 AM GMT)
ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள `பண்டிகை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஆரா சினிமாஸ் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை என்றாலே பல புதிய படங்கள் திரையில் ரிலீசாகி வருகின்றன. ஆனால் ஒருசில படங்களே மக்களிடையே வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான படங்களில் ஆரா சினிமாஸ் வழங்கி `பண்டிகை' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்க்கும் படமாக பண்டிகை உருவெடுத்துள்ளது. ஃபெரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கிருஷ்ணா - ஆனந்தி - சரவணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டீ டைம் டாக்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஃபெரோஸின் மனைவியும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.
`இருமுகன்', `தேவி', `சைத்தான்', ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே ஆரா சினிமாஸ் கொண்டாடி வருகிறது. மேலும் தங்களது வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக `பண்டிகை' படத்தையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது,
" திரையுலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் வருகிறது. இந்த நேரத்தில் `பண்டிகை' படத்தின் வெற்றி ஒரு ஒளிக்கீற்றாக வந்து இருக்கிறது. இதுவரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன இயக்குனர் ஃபெரோஸ் தமிழ் திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அவருடைய கடின உழைப்பும், திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.
தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் படம் 225 திரையரங்குகளில் ரிலீசாகியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக காட்சிகளின் எண்ணிக்கை மேலும் கூட இருக்கிறது. இந்த வெற்றியை ரசிகர்களின் நாடி துடிப்பை உள்ளங்கை நெல்லி கனியாய் அறிந்து வைத்து இருக்கும் இன்றைய இளம் இயக்குனர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எங்களது நிறுவனமான ஆரா சினிமாஸ் தமிழ் திரையுலகம் பெருமை கொள்ளும் தரமான படங்களை தொடர்ந்து வழங்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்"
இவ்வாறு கூறினார்.

ஆரா சினிமாஸ் கிருஷ்ணா பண்டிகை ஆனந்தி பெரோஸ் ஜி.எஸ்.டி கேளிக்கை வரி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் சரவணன் நிதின் சத்யா கருணாஸ் ப்ளாக் பாண்டி சபரிஷ் மதுசூதனன் அருள்தாஸ் Festival of Gangsters PANDIGAI Krishna Anandhi GST Entertainment Taxes Theater Owners Strike Saravanan Nitin Sathya Karunas Black Pandey Sabarish Madhusudhanan aruldoss PANDIGAI auraa cinemas
Next Story
×