search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூன்டாய்"

    ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய சான்ட்ரோ காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro
    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் அக்டோபர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதன் வெளியீடு அக்டோபர் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில் புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ முன்பக்கம் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரிய கருப்பு நிற கிரில், க்ரோம் சரவுன்டு, ஃபாக் லேம்ப்கள், கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட் பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.

    பின்புறம் முற்றிலும் புதிய டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர் சோதனைக்காக மறைக்கப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோவின் பெரிய வின்ட்ஷீல்டின் மேல் ஸ்டாப் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அதிநவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: MYNEWCAR

    காரின் உள்புறம் புதிய சான்ட்ரோ பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. டாப்-என்ட் மாடலில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் டூயல்-டோன் தீம் கொண்டுள்ளதோடு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் பின்புற ஏ.சி. வென்ட்கள் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான ஏர்-பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் வார்னிங் மற்று்ம முன்பக்க சீட்பெல்ட் ரிமைன்டர் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் டாப்-என்ட் வேரியன்ட்டில் டூயல் ஏர்-பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை வழங்கப்படுகிறது.

    புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்று்ம 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Hyundai #Santro
    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூன்டாய் நிறுவன வாகனங்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. #Hyundai #offer



    புதிய பொருள் வாங்கும் பலரும் பண்டிகை காலத்தில் தான் அவற்றை நிறைவேற்றிக் கொள்வர். பொதுவாக பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 

    இந்தியாவில் பண்டிகை காலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பலர் இந்த காலக்கட்டத்தில் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவர். இந்த பண்டிகை காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குகின்றன.

    அந்த வகையில் ஹூன்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. பண்டிகை கால சலுகைகள் அக்டோபர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.



    ஹூன்டாய் இயான் மாடலுக்கு ரூ.60,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.45,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூன்டாய் இயான் போன்று ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, , கிரான்ட் i10, எக்ஸ்-சென்ட், எலான்ட்ரா மற்றும் டக்சன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    இவற்றில் ஹூன்டாய் எலான்ட்ரா மற்றும் டக்சன் வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
    ஹூன்டாய் நிறுவனம் புதிய சன்ட்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 காரின் அறிமுக விவரங்கள் வெளியாகியுள்ளது. #Hyundai



    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்தியாவில் புதிய சான்ட்ரோ காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடல் அக்டோபர் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்நிலையில் அடுத்த தலைமுறை ஹூன்டாய் கிரான்ட் i10 கார் இந்தியாவில் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹூன்டாய் சான்ட்ரோ போன்றே, அடுத்த தலைமுறை கிரான்ட் i10 கார் தற்சமயம் விற்பனையாகும் காரை விட பிரீமியம் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிரான்ட் i10 பின்புறம் அமரும் வாடிக்கையாளர்களும் சவுகரிய அனுபவம் வழங்கும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் புதிய ஹூன்டாய் கிரான்ட் i10 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் கிரான்ட் i10 மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கலாம் என்றும் இதன் முன்பக்கம் அழகிய கிரில் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    கூடுதலாக முன்பக்கம் ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. காரின் பக்கவாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பு கொண்ட பெரிய ஜன்னல்கள் உள்புற கேபினில் காற்றோட்டத்திற்கு ஏதுவாக இருக்கின்றன. 

    பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப் கிளஸ்டர் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. கிரான்ட் i10 பாடி அம்சங்கள் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.

    கிரான்ட் i10 மாடலின் உள்புறம் டூயல்-டோன் நிறம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல்  மற்றும் மின்முறையில் மாற்றக்கூடிய ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Hyundai



    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கிரான்ட் i10 ஹேட்ச்பேக் கார் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் ஹூன்டாய் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

    அந்த வகையில் இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10 சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கிரான்ட் i10 மாடல் பூனேவில் சோதனை செய்யப்படும் படங்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய கிரான்ட் i10 கார் இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.


    புகைப்படம் நன்றி: IndianAutosBlog

    முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் கிரான்ட் i10 மாடல் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கலாம் என்றும் இதன் முன்பக்கம் அழகிய கிரில் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக முன்பக்கம் ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. 

    காரின் பக்கவாட்டில் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பு கொண்ட பெரிய ஜன்னல்கள் உள்புற கேபினில் காற்றோட்டத்திற்கு ஏதுவாக இருக்கின்றன. பின்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப் கிளஸ்டர் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. கிரான்ட் i10 பாடி அம்சங்கள் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று இருக்கும் என கூறப்படுகிறது.

    கிரான்ட் i10 மாடலின் உள்புறம் டூயல்-டோன் நிறம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல்  மற்றும் மின்முறையில் மாற்றக்கூடிய ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹூன்டாய் நிறுவனம் 2017-இல் அறிமுகம் செய்த கோனா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #HyundaiKONA



    ஹூன்டாய் நிறுவனம் தனது கோனா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் காரை 2017-இல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் வெளிநாடுகளில் விற்பனையாகி வரும் கோனா எலெக்ட்ரிக் இந்தியாவில் ஜூலை 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    கோனா எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை ஹூன்டாய் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்து இருந்ததை தொடர்ந்து இத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய கோனா எஸ்.யு.வி. சென்னையில் இயங்கி வரும் ஹூன்டாய் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்தியாவில் ஹூன்டாய் கோனா விலை ரூ.30 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 2019-ம் ஆண்டில் 1,000 யூனிட்களை உற்பத்தி செய்து அதன் பின் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது.



    ஹூன்டாய் கோனா எஸ்.யு.வி. மாடல் பெட்ரோல் மற்றும் சுத்தமான எலெக்ட்ரிக் இன்ஜின் கொண்ட வேரியன்ட் சர்வதேச சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா கே.யு.வி. 100 எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் முன் கோனா எலெக்ட்ரிக் அறிமுகமானால், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை கோனா பெரும்.

    கோனா எலெக்ட்ரிக் 470 மற்றும் 500 கிலோமீட்டர் என இருவித திறன்களில் வெளியிடப்பட இருக்கிறது. இத்துடன் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் டிரைவிங் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கென ஹூன்டாய் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் பேட்டரி செவி போல்ட் மாடலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது 40 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி பேக்களை கொண்டிருக்கும்.
    ஹூன்டாய் நிறுவனத்தின் AH2 கார் இந்தியாவில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்ட நிலையில், இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai



    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடலின் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. புதிய ஹூன்டாய் கார் AH2 என்ற பெயரில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஹூன்டாய் AH2 கார் சான்ட்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக பிரபலமான பிரான்டாக விளங்கிய சான்ட்ரோ கார் புதிய அம்சங்களுடன் மீண்டும் வெளியிடப்படலாம் என்றும், இந்த கார் மாருதி சுசுகி ஆல்டோ K10, ரெனால்ட் க்விட், டாடா டியாகோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூன்டாயின் புதிய கார் கிரான்ட் i10 மாடலுக்கு கீழ் நிலைநிறுத்தப்பட்டு, தற்போதைய இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த காரின் வரைபடத்தை ஹூன்டாய் வெளியிட்டது, அதன்படி கார் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சற்றே வளைந்திருக்கும் ரூஃப்லைன் மற்றும் கம்பீரமான ஷோல்டர் லைன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஹூனடாய் சான்ட்ரோ மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய ஹேட்ச்பேக் இயான் மாடலுக்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது. புதிய காரின் கேபின் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியம் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் BS-VI எமிஷன் மற்றும் AMT யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    உள்புறம் ஹூன்டாய் மாடலில் டூயல்-டோன் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த உபகரணங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் வசதியான இருக்கைகள், கால் வைக்கும் வசதி மற்றும் ஹெட்ரூம் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட இருக்கிறது. #Hyundai
    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது இயான் ஹேட்ச்பேக் விற்பனையை நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு மாற்றாக புதிய கார் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Hyundai #automobile


    ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் இயான் ஹேட்ச்பேக் மாடலின் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயான் காருக்கு மாற்றாக ஹூன்டாய் சில மாதங்களாக சோதனை செய்து வரும் புதிய ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் AH2 என்ற குறியீட்டு பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

    புதிய AH2 கார் அறிமுகமானதும், ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 விற்பனை படிப்படியாக நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு முதல் இயான் விற்பனை வெகுவாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2020 எமிஷனின் படி புதிய விதிமுறைகள் அமாலகும் போது, ஹூன்டாயின் புதிய ஹேட்ச்பேக் சந்தையில் புதுவரவு காராக இருக்கும். புதிய ஹேட்ச்பேக் i10 மாடலின் பிளாட்ஃபார்மையே பயன்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை வெளியாகி இருக்கிறது. 



    இந்த காருக்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய காரின் பெயரை வழங்கலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த கார் புதிய பொலிவுடன் சான்ட்ரோ பிரான்டிங் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. 

    இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
    ஹூன்டாய் கிரெட்டா 2018 எஸ்.யு.வி. இரண்டே மாதங்களில் சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai


    இந்தியாவில் 2015-ம் ஆண்டு அறிமுகமான ஹூன்டாய் கிரெட்டா எஸ்.யு.வி. மிகவும் பிரபலமான மாடலாக அறியப்படுகிறது. இதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 கிரெட்டா வெர்ஷன் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் புதிய கிரெட்டா மாடல் சுமார் 40,000-க்கும் அதிமானோர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கிரெட்டா காரில் முன்பக்கம் பெரிய கேஸ்கேட் கிரில், முன்பக்க பம்ப்பரில் ஃபாக் லேம்ப் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர்கள் மற்றும் டெயில்லேம்ப்களில் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு  பின்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    உள்புறத்தின் ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், டாப் என்ட் மாடலில் மட்டும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பேஸ் இ வேரியன்ட் மாடலில் ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. டாப்-என்ட் SX (O) மாடலில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை ஆறு விதங்களில் மாற்றும் வசதி, ஸ்மார்ட் கீ பேன்ட், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆறு ஏர்-பேக் வழங்கப்பட்டுள்ளது.
     


    ஹூன்டாய் கிரெட்டா 2018 மாடலில் 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.54 லிட்டர் டீசல் இன்ஜின் 88.7 பிஹெச்பி பவர், 1.6 லிட்டர் பெட்ரோல் யூனிட் 121 பிஹெச்பி பவர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் யூனிட் 126 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    1.4 லிட்டர் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.6 லிட்டர் இன்ஜின்கள் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளன. டாப்-என்ட் SX (O) வேரியன்ட் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அம்சம் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா 2018 பேஸ் வேரியன்ட் விலை ரூ.9.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) துவங்கி டாப் என்ட் வேரியன்ட் விலை ரூ.15.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கிரெட்டா 2018 வைட், ஆரஞ்சு, பிளாக், சில்வர் புளு, ரெட், வைட்/பிளாக் (டூயல்-டோன் ) மற்றும் ஆரஞ்சு/பிளாக் (டூயல்-டோன்) என மொத்தம் ஏழு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. #Hyundai
    ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஃபாஸ்ட்பேக் N காரின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் மோட்டார், புதிய i30 ஃபாஸ்ட்பேக் N காரின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலுடன் i30 N ஹாட் ஹேட்ச் மற்றும் i30 டூரர் எஸ்டேட்/ஸ்டேஷன் வேகன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N  மாடல் பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹூன்டாய் தனது ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்து வருகிறது.

    இறுதிகட்ட பணிகளுக்கு முன் அதிக செயல்திறன் கொண்ட காரினை முழுமையாக சோதனை செய்வதில் ஹூன்டாய் கவனமாக உள்ளது. இதன் காரணமாக புதிய கார் பலக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூழல்களில் கார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.


    அதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது. 
    ஹூன்டாய் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Hyundai


    ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தயாரிப்பு ஆலையில் ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 20 ஆண்டுகளுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை எதிர்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. 

    மேலும் எதிர்கால தொழில்நுட்பங்களான BS VI எமிஷன், கார் மற்றும் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், அனைத்து மாடல்களிலும் ஏ.பி.எஸ். மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றை வழங்க முடியும் என ஹூன்டாய் மோட்டா இந்தியா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வை.கே. கூ தெரிவித்தார்.

    இதுதவிர இதே தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்ய முடியும். 2020-ம் ஆண்டிற்குள் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக உருவெடுக்கும் நோக்கில் அனைத்து ஏற்பாடுகளையும் ஹூன்டாய் மோட்டார் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

    2018-2020 ஆண்டுகளில் மட்டும் எட்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் அடங்கும், இந்த கார் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    இதுவரை எலெக்ட்ரிக் கார் சார்ந்து எவ்வித தகவலும் அந்நிறுவனம் வழங்கவில்லை என்பதால், புதிய கார் ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹூன்டாய் கார்களில் வழங்குவதற்கான பேட்டரிகளை பெற தென்கொரிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.

    2020-ம் ஆண்டிற்குள் அனைத்து மாடல்களையும் முழுமையாக மாற்ற ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. இத்துடன் ஹூன்டாய் AH2 குறியீட்டு பெயரில் சோதனை செய்யப்படும் கார் சான்ட்ரோ என பெயரிடப்படாது என கூ தெரிவித்துள்ளார். இந்த கார் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் அடுத்த மாத வாக்கில் ஹூன்டாய் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களிடம் புதிய AH2 காரின் பெயரை வழங்கலாம். இந்த போட்டி ஆகஸ்டு 16 இல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சான்ட்ரோ பிரான்டு அதிகம் பிரபலமான மாடலாக இருந்தது. 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அதிக பிரபலமாக இருந்த சான்ட்ரோ, பின்னர் ஹூன்டாய் i10 மாடல் அறிமுகமானதும் சான்ட்ரோ விற்பனை குறைந்தது. #Hyundai
    ஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூன்டாய் எலான்ட்ரா 2019 ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கார் உற்பத்திக்கு தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் புதிய கார் அதிகம் மேம்படுத்தப்பட்டு புதிய ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், க்ரோம் டீடெயிலிங், புதிய மற்றும் கூர்மையான தோற்றம் கொண்ட முக்கோண ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ரோஜெக்டர் லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்களை சுற்றி எல்இடி பொசிஷன் லைட்கள் இருபுறமும் சிக்னல் லைட்களை ஆன் செய்யும் படி வைக்கப்பட்டு இறுக்கிறது.

    முன்பக்க பம்ப்பர் மிகவும் கூர்மையாகவும், முக்கோன வடிவம் கொண்ட ஃபாக்லேம்ப்கள் மற்றும் சிறிய ஏர்-இன்டேக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டுகளில் ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதன் மாடல் பெயர் பேட்ஜிங் ஹூன்டாய் லோகோவின் கீழ் மாற்றப்பட்டு இருக்கிறது. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.



    இதன் டெயில் லேம்ப்களும் மாற்றப்பட்டு புதிதாக காட்சியளிக்கிறது. இதன் நம்பர் பிளேட் பம்ப்பருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கேபின் எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாக இல்லை. எனினும் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய 2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். சர்வதேச மாடலில் புதிய பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம், குறிப்பாக ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 154 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 

    புகைப்படம்: நன்றி Gepann.com
    தென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.




    தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்தியாவில் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை சோதனை செய்து வருகிறது. பூனே அருகே சோதனை செய்யப்படும் i30 மாடல் புகை மாசு சோதனை செய்யப்படுவது புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.

    சோதனை செய்யப்படும் i30 காரின் பின்புறம் எரிபொருள் மாசு சோதனை செய்யும் சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது. தற்சமயம் மேற்கொள்ளப்படும் சோதனைகளைத் தொடர்ந்து i30 கார் இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் அறிமுகம் செய்வது குறித்து ஹூன்டாய் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இந்தியாவில் புதிய i30 கார் ஹூன்டாய் i20 எலைட் மற்றும் கிரெட்டா எஸ்யுவி மாடல்களுக்கு இடையில் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய ஹேட்சேபக் நான்கு மீட்டர்கள் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.



    ஹூன்டாய் i30 மாடலில் ஃப்ளியூடிக் டிசைன் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு மற்றும் புதிய ஹெக்சாகோனல் கிரில், புதிய ஹெட்லேம்ப்கள், எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள், ரூஃப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்படுகின்றன.

    தற்சமயம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் யூரோ VI எமிஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவில் ஹூன்டாய் i30 மாடலில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதே இன்ஜின் ஹூன்டாய் வெர்னா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலில் பல்வேறு சவுகரிய மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வரை இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல்கள் வெளியாக நிலையில் i30 மாடலுக்கு எவ்வித போட்டியும் இருக்காது என கூறப்படுகிறது.

    புகைப்படம்: நன்றி autocarindia.com
    ×