search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai i30 Fastback N"

    ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஃபாஸ்ட்பேக் N காரின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் மோட்டார், புதிய i30 ஃபாஸ்ட்பேக் N காரின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலுடன் i30 N ஹாட் ஹேட்ச் மற்றும் i30 டூரர் எஸ்டேட்/ஸ்டேஷன் வேகன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N  மாடல் பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹூன்டாய் தனது ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்து வருகிறது.

    இறுதிகட்ட பணிகளுக்கு முன் அதிக செயல்திறன் கொண்ட காரினை முழுமையாக சோதனை செய்வதில் ஹூன்டாய் கவனமாக உள்ளது. இதன் காரணமாக புதிய கார் பலக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூழல்களில் கார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.


    அதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.

    கடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது. 
    ×