search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ புகைப்படங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன புதிய ஹூன்டாய் சான்ட்ரோ புகைப்படங்கள்

    ஹூன்டாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய சான்ட்ரோ காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro
    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் அக்டோபர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதன் வெளியீடு அக்டோபர் 26-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில் புதிய காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்பு சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ முன்பக்கம் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரிய கருப்பு நிற கிரில், க்ரோம் சரவுன்டு, ஃபாக் லேம்ப்கள், கிரில், ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட் பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.

    பின்புறம் முற்றிலும் புதிய டெயில் லைட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்ப்பர் சோதனைக்காக மறைக்கப்பட்டு இருக்கிறது. சான்ட்ரோவின் பெரிய வின்ட்ஷீல்டின் மேல் ஸ்டாப் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. புதிய சான்ட்ரோவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு அதிநவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: MYNEWCAR

    காரின் உள்புறம் புதிய சான்ட்ரோ பிரீமியம் தோற்றம் பெற்றிருக்கிறது. டாப்-என்ட் மாடலில் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் டூயல்-டோன் தீம் கொண்டுள்ளதோடு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர புதிய ஹூன்டாய் சான்ட்ரோவில் பின்புற ஏ.சி. வென்ட்கள் டாப்-என்ட் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான ஏர்-பேக், ஏ.பி.எஸ்., ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலெர்ட் வார்னிங் மற்று்ம முன்பக்க சீட்பெல்ட் ரிமைன்டர் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் டாப்-என்ட் வேரியன்ட்டில் டூயல் ஏர்-பேக், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்றவை வழங்கப்படுகிறது.

    புதிய சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்று்ம 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய சான்ட்ரோவில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Hyundai #Santro
    Next Story
    ×