search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரா பென்"

    • மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார்.
    • தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார். தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார். அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

    மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார். ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.

    • மோடியின் தாயாருக்காக, பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதர் தகவல்
    • மோடியின் தாயார் விரைவில் நலம் பெற ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

    கொல்கத்தா:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் (99) உடல்நலக் குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர்கிலோன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியதுடன் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
    • பிரதமரின் தாயார் விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    ×