என் மலர்
நீங்கள் தேடியது "Hiraben"
- மோடியின் தாயாருக்காக, பிரார்த்தனை செய்வதாக இஸ்ரேல் தூதர் தகவல்
- மோடியின் தாயார் விரைவில் நலம் பெற ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
கொல்கத்தா:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் (99) உடல்நலக் குறைவு காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர்கிலோன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியதுடன் இருக்கவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.






