search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் டிவி"

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் டிவியில் பில்ட்-இன் ஒடிடி ஆப்ஸ் மற்றும் டால்பி ஆடியோ வசதிகளை கொண்டிருக்கிறது.

    டிரான்சிஷன் குரூப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் 43 Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி 43 இன்ச் FHD LED டிஸ்ப்ளே, 300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் டிவி என்ற போதிலும் இந்த மாடல் லினக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5, இரோஸ் நௌ போன்ற முன்னணி ஒடிடி சேவைகள் பில்ட்-இன் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டிவி ரிமோட்-இல் யூடியூப் மற்றும் பிரைம் வீடியோ போன்ற சேவைகளுக்கான ஹாட்-கீ உள்ளது.

    இன்பினிக்ஸ் 43 Y1 அம்சங்கள்:

    43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே

    குவாட் கோர் பிராசஸர்

    மாலி ஜி31 GPU

    4 ஜிபி மெமரி

    லினக்ஸ் ஒஎஸ்

    யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஆஜ் டக், சோனி லிவ், இரோஸ் நௌ, ஹங்காமா, பிலெக்ஸ், யப் டிவி

    வைபை, 2x HDMI, 2x USB போர்ட்கள், 1 RF இன்புட், 1 AV இன்புட், 1 ஹெட்போன் ஜாக்

    20 வாட் (2x10 வாட்) ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் 43 Y1 மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை விரைவில் ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
    • இவற்றில் போட் நிறுவனத்தின் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் ரெவோ2 சீரிசில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை சவுண்ட் பை போட் அம்சம் கொண்டுள்ளன. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் பண்டிகை கால சிறப்பு விற்பனையின் அங்கமாக அறிமுகமாகி இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் மோட்டோரோலா ரெவோ2 ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் HD, 40 இன்ச் மற்றும் 43 இன்ச் FHD, 43 இன்ச் UHD வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவிக்களில் மீடியாடெக் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் டால்பி விஷன், HDR10 சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவை தவிர ஆட்டோ லோ லேடன்சி மோட், மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் கம்பன்சேஷன், 4K மாடல்களில் லோ புளூ லைட் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. HD மற்றும் FHD டிவிக்களில் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, UHD மாடலில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் போட் ஆப்டிமைஸ் செய்த சவுண்ட் கொண்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    மோட்டோரோலா ரெவோ2 32 இன்ச் HD டிவி விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் FHD டிவி மாடல்கள் விலை முறையே ரூ. 16 ஆயிரத்து 999, ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. 43 இன்ச் 4K UHD டிவி விலை ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டோரோலா ரெவோ2 ஸ்மார்ட் டிவி விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது.

    • சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய சாம்சங் ஸ்மார்ட் டிவியில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் முற்றிலும் புதிய, ரி-டிசைன் செய்யப்பட்ட சாம்சங் டிவி பிளஸ் சேவை உள்ளது.

    இதன் மூலம் 55 நேபலை சர்வதேச மற்றும் உள்ளூர் சேனல்களை பார்க்கும் வசதி மற்றும் டைசன் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹை டைனமிக் ரேன்ஜ் மற்றும் பர்கலர் தொழில்நுட்பங்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் அல்ட்ரா கிளீன் வியூ தொழில்நுட்பம் உள்ளது. இது காட்சியின் ஆழத்தை மேம்படுத்தி படங்களை அதிக தரத்தில் காண்பிக்கிறது.

    மேலும் இதில் உள்ள டால்பி டிஜிட்டல் பிளஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் எபெக்ட் வழங்குகிறது. இத்துடன் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ஏராளமான மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் 32 இன்ச் HD எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள்

    32 இன்ச் HD 1366x768 பிக்சல் எல்இடி ஸ்கிரீன், 50Hz ரிப்ரெஷ் ரேட்

    2x HDMI, 1x USB

    20 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட்

    டைசன் ஒஎஸ் மற்றும் சாம்சங் டிவி பிளஸ்

    நெட்ப்ளிக்ஸ், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு ஆப்ஸ் சப்போர்ட்

    பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

    • 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கினார்
    • ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள அல்லியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் இவருக்கு தமிழக அரசின்டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது மற்றும் ரூபாய் 10, ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமையாசிரியர் மாலவன், தனக்கு வழங்கிய ரூ.10,000 பரிசு தொகை மற்றும் அவரது சொந்த பணம் ரூ.5000 சேர்த்து ரூபாய் 15,000 மதிப்புள்ள 43 இன்ச் ஸ்மார்ட் கலர் டிவியை 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோடக் நிறுவனத்தின் முதல் QLED ஸ்மார்ட் டிவி சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • இவற்றில் மொத்தம் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    கோடக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் QLED ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் மேட்ரிக்ஸ் QLED எனும் பெயரில் 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் டிவி வசதி வழங்கப்பட்டுள்ளன.

    பண்டிகை காலத்தை ஒட்டி நடைபெறும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் கோடக் நிறுவனத்தின் ஏழாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய மேட் இன் இந்தியா QLED டிவிக்கள் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் சான்று பெற்றுள்ளன. இவை தரமான ஆடியோ மற்றும் பிக்சர் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கின்றன.


    இத்துடன் மேம்பட்ட சவுண்ட் அனுபவம் கிடைக்க இவற்றில் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10-பிட் 4K QLED பேனல்கள், டால்பி MS12 மற்றும் HDR10+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புதிய கோடக் ஸ்மார்ட் டிவிக்கள் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றன.

    இவற்றில் MT9062 பிராசஸர், யுஎஸ்பி 2.0, HDMI (ARC,CEC) மற்றும் ப்ளூடூத் டூயல் பேண்ட் என ஏராளமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவிக்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் க்ரோம்காஸ்ட் இண்டகிரேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கோடக் QLED ஸ்மார்ட் டிவிக்களில் பெசல் லெஸ் டிசைன் மற்றும் 40 வாட் டால்பி அட்மோஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன.

    இந்த டிவியுடன் வரும் ரிமோட் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி மற்றும் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற சேவைகளுக்கு பிரத்யேக பட்டன்களை கொண்டிருக்கிறது. கூகுள் டிவி இண்டர்பேஸ் கொண்டிருப்பதால் இந்த டிவியில் கூகுள் சார்ந்த அம்சங்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய கோடக் 50 இன்ச் QLED டிவி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் மாடல் விலை ரூ. 40 ஆயிரத்து 999 என்றும் 65 இன்ச் QLED மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனைக்கு வருகின்றன.

    • தாம்சன் நிறுவனத்தின் புதிய QLED டிவி மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய டிவி மாடல்கள் டால்பி விஷன், 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    சூப்பர் பிளாஸ்டிரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய தாம்சன் QLED ஸ்மார்ட் டிவிக்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் டிவி வசதி உள்ளது. இவை 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இவற்றில் டால்பி விஷன், HDR10+, 40 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது.

    இந்த மாடல்களில் மெல்லிய, பெசல்-லெஸ் டிசைன் மற்றும் மெட்டாலிக் ஸ்டாண்ட் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஏ53 மீடியாடெக் எம்டி9602 பிராசஸர், மாலி G52 MC1 GPU மற்றும் டூயல் பேண்ட் வைபை வழங்கப்பட்டு இருக்கிறது.


    தாம்சன் QLED டிவி அம்சங்கள்:

    50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் 3840x2160 பிக்சல் 4K QLED டிஸ்ப்ளே, டால்பி விஷன்

    1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் எம்டி 9602 பிராசஸர்

    மாலி G52 MC1 GPU

    2 ஜிபி ரேம்

    16 ஜிபி மெமரி

    கூகுள் டிவி

    நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஷார்ட்க்ட் கொண்ட வாய்ஸ் ரிமோட்

    வைபை, ப்ளூடூத் 5.0

    3x HDMI, 2x யுஎஸ்பி, S/PDIF, AV இன்புட், 1x ஈத்தர்நெட்

    40 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ், டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய தாம்சன் QLED டிவி 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 33 ஆயிரத்து 999, ரூ. 40 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 59 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது விற்பனைக்கு வருகிறது.

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மெட்டாலிக் பெசல்-லெஸ் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    சியோமி நிறுவனம் புதிய X சீரிஸ் 4K டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 4K டிவி மாடலில் பிரீமியம் மெட்டாலிக் பெசல் லெஸ் பினிஷ், டால்பி விஷன், HDR10+, ஹைப்ரிட் லாக் காமா சப்போர்ட், அதிகபட்சம் ஒரு பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இறுக்கிறது. இத்துடன் மற்ற சியோமி ஸ்மார்ட் டிவிக்களை போன்றே இந்த மாடலிலும் விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த டிவியில் அதிநவீன பேட்ச்வால் 4, 75-க்கும் அதிக நேரலை சேனல்கள், 30-க்கும் அதிக ஒடிடி செயலிகளில் தரவுகளை தேடும் வசதி, கிட்ஸ் மோட், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட் பரிந்துரை போன்ற அம்சங்கள் உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் மற்றும் பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, புதிய HDMI 2.1 eARC மற்றும் அதிக பேண்ட்வித் ஆடியோ வசதி உள்ளது.


    சியோமி டிவி X சீரிஸ் அம்சங்கள்:

    43 இன்ச் / 50 இன்ச் / 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே

    178 டிகிரி வியூவிங் ஆங்கில், விவிட் பிக்ச்சர் என்ஜின், டால்பி விஷன், HDR10+, HDR 10, HLG, MEMC

    குவாட்கோர் A55 பிராசஸர்

    மாலி G52 MC 1 GPU

    2 ஜிபி ரேம்

    8 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பேட்ச்வால் 4

    வைபை, ப்ளூடூத் 5, 3x HDMI 2.1, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்

    Mi வாய்ஸ் ரிமோட்

    30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் X

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி ஸ்மார்ட் டிவி சீரிஸ் X 43 இன்ச் மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் 50 இன்ச் மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் வெர்ஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது. 

    • சியோமி நிறுவனத்தின் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த டிவி குவாட் கோர் கார்டெக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சியோமி நிறுவனத்தின் புது ஸ்மார்ட் டிவி மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் சியோமி அறிமுகம் செய்த சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பேட்ச்வால் 4 சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி 11, டிடிஎஸ் எக்ஸ், டால்பி ஆடியோ, விவிட் பிக்சர் என்ஜின் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த டிவி பெசல்கள் இன்றி ஹெச்டி ரெடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ மாடலில் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்டிஎம்ஐ 2.0, இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஏவிஐ இன்புட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஈத்தர்நெட் போர்ட், டூயல் பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது.


    சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலில் 24 வாட் ஆடியோ அவுட்புட் வழங்கும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இத்துடன் டால்பி ஆடியோ, டிடிஎஸ் எக்ஸ் சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லோ லேடன்சி மோட், டால்பி அட்மோஸ் பாஸ் த்ரூ வழங்குகிறது. முந்தைய ஸ்மார்ட் டிவி மாடல்களை போன்றே சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடலிலும் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் இருந்து ஸ்கிரீன் காஸ்ட் செய்யும் வசதி உள்ளது.

    மேலும் கூகுள் அசிஸ்டண்ட் சேவைக்கு ஹேண்ட்ஸ் பிரீ அக்சஸ், ரிமோட் கண்ட்ரோல், கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான செயலிகளை பயனர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் உள்ள டிஸ்ப்ளே 768x1366 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் விலை இந்திய சந்தையில் ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அமேசான், ப்ளிப்கார்ட், Mi மற்றும் Mi ஹோம் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இதன் விற்பனை துவங்க உள்ளது. இந்த டிவி பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு தள்ளுபடி மற்றும் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ×