என் மலர்
கணினி

மூன்று அளவுகளில் 4K டிவி மாடல்களை அறிமுகம் செய்த சியோமி
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் டிவிக்களில் மெட்டாலிக் பெசல்-லெஸ் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனம் புதிய X சீரிஸ் 4K டிவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 4K டிவி மாடலில் பிரீமியம் மெட்டாலிக் பெசல் லெஸ் பினிஷ், டால்பி விஷன், HDR10+, ஹைப்ரிட் லாக் காமா சப்போர்ட், அதிகபட்சம் ஒரு பில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இறுக்கிறது. இத்துடன் மற்ற சியோமி ஸ்மார்ட் டிவிக்களை போன்றே இந்த மாடலிலும் விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவியில் அதிநவீன பேட்ச்வால் 4, 75-க்கும் அதிக நேரலை சேனல்கள், 30-க்கும் அதிக ஒடிடி செயலிகளில் தரவுகளை தேடும் வசதி, கிட்ஸ் மோட், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட் பரிந்துரை போன்ற அம்சங்கள் உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் மற்றும் பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, புதிய HDMI 2.1 eARC மற்றும் அதிக பேண்ட்வித் ஆடியோ வசதி உள்ளது.
சியோமி டிவி X சீரிஸ் அம்சங்கள்:
43 இன்ச் / 50 இன்ச் / 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
178 டிகிரி வியூவிங் ஆங்கில், விவிட் பிக்ச்சர் என்ஜின், டால்பி விஷன், HDR10+, HDR 10, HLG, MEMC
குவாட்கோர் A55 பிராசஸர்
மாலி G52 MC 1 GPU
2 ஜிபி ரேம்
8 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் பேட்ச்வால் 4
வைபை, ப்ளூடூத் 5, 3x HDMI 2.1, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
Mi வாய்ஸ் ரிமோட்
30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ஹெச்டி மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் X
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
சியோமி ஸ்மார்ட் டிவி சீரிஸ் X 43 இன்ச் மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் 50 இன்ச் மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 55 இன்ச் வெர்ஷன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி விற்பனை செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்குகிறது.






