search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக்ஸ்"

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சுத்தம் செய்த வாழைப்பூ - ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்).

    கடலை மாவு - 1 கப்,

    அரிசி மாவு - 5 டீஸ்பூன்,

    மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா ஒரு சிட்டிகை,

    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

    தேவையான பொருட்கள்

    ரவை - 1 கப்

    மைதா - 1 கப்

    துருவிய தேங்காய் - 1 கப்

    சர்க்கரை - ஒன்றரை கப்

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    உப்பு - சிட்டிகை

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

    இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.

    ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

    இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையானபொருட்கள் :

    விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்,

    கர்ஜூர் (Khajur )- 8 (விதை நீக்கியது),

    நெய் - 100 கிராம்,

    எண்ணெய் - 50 மில்லி,

    சர்க்கரை - 250 கிராம்,

    டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,

    முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,

    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை :

    பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.

    நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.

    வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.

    ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான சத்தான ட்ரை ஃப்ரூட் அல்வா ரெடி.

    இதை அப்படியேவும் கொடுக்கலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டியும் கொடுக்கலாம். இதை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்

    வெல்லம் - 1/2 கப்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    கனிந்த வாழைப்பழம் - 2

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்

    உப்பு - 1 சிட்டிகை

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று 'ஆனியன் ரிங்ஸ்'.
    • விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 5

    மைதா மாவு - 200 கிராம்

    சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

    ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 2 தேக்கரண்டி

    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    பூண்டு - 8 பல்

    தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    ரொட்டித் தூள் - 100 கிராம்

    'டிப்' தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிரியாணி இலை - 1

    வெண்ணெய் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 1 ஆரிகனோ (உலர்ந்த கற்பூரவள்ளி) - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

    மயோன்னஸ் - 4 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    படத்தில் காட்டியுள்ளதுபோல் வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, மிளகுத்தூள், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.

    பின்பு வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    'டிப்' செய்முறை

    வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், பிரியாணி இலை, சில்லி பிளேக்ஸ், பொடிதாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

    பின்னர் அந்தக் கலவையில் மயோன்னஸ், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

    இப்பொழுது 'ஆனியன் மயோன்னஸ் டிப்' தயார்.

    மொறுமொறு ஆனியன் ரிங்சுடன், ஆனியன் மயோன்னஸ் டிப் சேர்த்து பரிமாறலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளைக் காராமணி - 1 கப்

    தினை அல்லது வரகு அல்லது அரிசி - கால் கப்

    வெங்காயம் - 1

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 4

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெள்ளைக் காராமணியுடன், தினை அல்லது வரகு அல்லது அரிசியை நன்றாக கழுவி மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள்.

    * நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில்வைத்து மாவை மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.

    * சூப்பரான காராமணி வடை ரெடி.

    புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முடக்கத்தான் கீரை உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.
    • முடக்கத்தான் கீரை மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சலை தீர்க்கும்.

    தேவையான பொருட்கள்:

    முடக்கத்தான் கீரை இலை - 3 கைப்பிடி

    பச்சரிசி - கால் கிலோ

    சிவப்பு மிளகாய் - 6

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    தேங்காய் - அரை மூடி

    நெய் - தேவையான அளவு

    பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முடக்கத்தான் கீரை இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    பச்சரியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் கீரை இலையை போட்டு நன்றாக வதக்கவும்.

    அரைத்த மாவில் வதக்கிய கீரை, மிளகு தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். கைவிடாமல் கிளறி விடவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆற வைக்கவும்.

    மாவு நன்றாக ஆறியதும் மாவை நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டில் செய்து வைத்த பிடி கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முடக்கத்தான் கீரை பிடி கொழுக்கட்டை ரெடி.

    இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்.
    • இன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பஞ்சாபி மிளகு அப்பளம் - 5 (பெரியது)

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    வெள்ளரிக்காய் - 1,

    கேரட் - 2

    கொத்தமல்லி - தேவையான அளவு

    ஓமப்பொடி - 2 கப்

    சாட் மசாலா - 3 டீஸ்பூன்

    சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அடுப்பில் சூட்டுக்கொள்ளலாம்.

    அப்பளம் லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள்.

    அதன் மேல் தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள்.

    கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள்.

    சூப்பரான மசாலா பப்பட் சாட் ரெடி.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்தனுப்ப சூப்பரான ரெசிபி இது.

    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 5,

    பன்னீர் துருவல் - கால் கப்,

    கேரட் துருவல் - சிறிதளவு,

    நறுக்கிய குடைமிளகாய் - சிறிதளவு,

    வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்),

    தக்காளி சாஸ், சோயா சாஸ் - தலா 2 டீஸ்பூன்,

    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருகியதும் வெங்காயம், பன்னீர் துருவல், குடைமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருகியதும், சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.

    சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பன்னீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான பன்னீர் ஃப்ராங்கி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பிஷ் ஃபிங்கர்ஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க.
    • இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    வஞ்சரம் (அ) வவ்வால் மீன் - அரை கிலோ

    எலுமிச்சை பழம் - இரண்டு (சாறு எடுக்கவும்)

    ரொட்டித்தூள் - 1௦௦ கிராம்

    காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரணடி

    முட்டை - மூன்று

    வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    எண்ணெய் - தேவைகேற்ப

    செய்முறை

    முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும்.

    பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

    மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

    எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

    மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

    • பாப்கார்ன், சாக்லேட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இன்று இது இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,

    குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,

    வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - சிறிதளவு,

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது சாக்லேட் உள்ள

    பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும். உருக ஆரம்பித்ததும் இறக்கி நெய் (அ) வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும். பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

    பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.

    நன்கு குலுக்கி சீராக பரவ விடவும்.

    சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.

    இதனை ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் போட்டு வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    • சாக்லேட் பால்ஸ் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரிச்சான ரெசிபி.
    • அளவான பொருட்களை வைத்து அதிரடியாக செய்யக்கூடிய ரெசிபி இது.

    தேவையான பொருட்கள்

    கோகோ பவுடர் - 25 கிராம்,

    கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,

    பட்டர் - ஒரு ஸ்பூன்,

    உப்பு - சிறிது,

    சாக்லேட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் (உலர வைத்தது).

    பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்.

    செய்முறை

    ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணெய்யை தடவி வைக்கவும்.

    இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கோகோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்தவும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணெய் பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்றவும்.

    சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணெயை தடவி இந்த சாக்லேட் கலவையை உருண்டைகளாக உருட்டவும்.

    இந்த உருண்டையை ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட்ஃபட்ஜ் பால்ஸ் தயார்.

    ×