search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நார்ச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் காராமணி வடை
    X

    நார்ச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் காராமணி வடை

    • காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்

    வெள்ளைக் காராமணி - 1 கப்

    தினை அல்லது வரகு அல்லது அரிசி - கால் கப்

    வெங்காயம் - 1

    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    காய்ந்த மிளகாய் - 4

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெள்ளைக் காராமணியுடன், தினை அல்லது வரகு அல்லது அரிசியை நன்றாக கழுவி மூன்று முதல் 4 மணிநேரம் ஊறவையுங்கள்.

    * நன்றாக ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில்வைத்து மாவை மெலிதான வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுங்கள்.

    * சூப்பரான காராமணி வடை ரெடி.

    புரதச் சத்து நிறைந்த இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். வாயுத் தொல்லை கிடையாது. வெள்ளைக் காராமணியில் சுண்டலும் செய்து சாப்பிடலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×