search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaat Recipes"

    • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    வெங்காயம் - 1

    வெள்ளரிக்காய் - 1

    தக்காளி - 1

    ஓமப்பொடி - 1 கப்

    சீஸ் துருவல் - 1 கப்

    சட்னி தயாரிக்க:

    புதினா - ஒரு கைப்பிடி

    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - சிறிய துண்டு

    பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    சட்னி தயாரிக்க:

    ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    சாண்ட்விச் தயாரிக்க:

    வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

    முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.

    பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

    இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
    • இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    கேரட் - 1

    பீட்ரூட் - 1

    வெங்காயம் - 1

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித்தழை - 1 கட்டு

    தேங்காய் - 1 துண்டு

    பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 5

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.

    அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
    • இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    தேவையான பொருள்கள்:

    உருளைக்கிழங்கு - 2

    கொண்டைக்கடலை - கால் கப்

    இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - 1

    மாதுளை - சிறிதளவு

    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

    கல் உப்பு - தேவைக்கேற்ப

    பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப

    செய்முறை :

    கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.

    எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

    இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்.
    • இன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பஞ்சாபி மிளகு அப்பளம் - 5 (பெரியது)

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    வெள்ளரிக்காய் - 1,

    கேரட் - 2

    கொத்தமல்லி - தேவையான அளவு

    ஓமப்பொடி - 2 கப்

    சாட் மசாலா - 3 டீஸ்பூன்

    சர்க்கரை - 2 டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அடுப்பில் சூட்டுக்கொள்ளலாம்.

    அப்பளம் லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள்.

    அதன் மேல் தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள்.

    கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள்.

    சூப்பரான மசாலா பப்பட் சாட் ரெடி.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சில் ஊற வைத்து விடும்.
    • காரசாரமான ஆலு சாட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)

    காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

    உலர்ந்த மாங்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

    எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

    புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி புதினா சட்னி - 1/2 டேபிள் ஸ்பூன்

    ஓமப் பொடி(சேவ்) - தேவையான அளவு

    கொத்தமல்லி நறுக்கியது - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மாதுளை - அலங்காரத்திற்கு

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர வடிவில் உள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.

    பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும்

    பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும்

    இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும்.

    இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் சூப்பரான ஆலு சாட் ரெசிபி ரெடி

    • எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன், தக்காளி -  தலா ஒன்று,

    சாட் மசாலா பொடி - ஒரு டீஸ்பூன்,

    எலுமிச்சம்பழம் - அரை மூடி,

    சிறிய பூரிகள் - 10 (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்),

    காராசேவ், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ஸ்வீட் கார்னை வேக வைத்து உதிர்க்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    ஒரு தட்டில் பூரிகளை பரத்தி வைக்கவும். அதன் மீது உதிர்த்த ஸ்வீட் கார்ன், தக்காளி, சாட் மசாலா பொடி, எலுமிச்சைச் சாறு, காராசேவ், உப்பு ஆகியவற்றை தூவவும்.

    ஹெல்தியான, எளிதில் செய்யக் கூடிய சாட் வகை இது.

    விரும்பினால் கிரீன் சட்னியையும் மேலே விட்டு பரிமாறலாம்.

    • சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சமோசா - 3

    அப்பளம் - 4

    தயிர் - 3 மேஜைக்கரண்டி

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புதினா சட்னி - 2 தேக்கரண்டி

    புளி சட்னி - 2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி

    ஓமப் பொடி - 1 கப்

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    துண்டுகளாக உடைத்த சமோசாவை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் நன்றாக கலந்த தயிரை ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும்.

    மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    அடுத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் சத்தானது மற்றும் சுவையானது.
    • கோதுமை கார பொரி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை பொரி - 100 கிராம்

    வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

    கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

    தக்காளி சிறியது - 1 பொடியாக நறுக்கியது

    வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    சாட் மசாலா - அரை தேக்கரண்டி

    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோதுமை பொரியை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், வேர்க்கடலை, உப்பு சேர்த்து வறுக்கவும். இவ்வாறு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போது இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை கார பொரி ரெடி.

    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    வெங்காயம் - 2
    பூண்டு - 1
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு கலந்த தண்ணீர் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    புளித்தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    மிக்ஸ்டு ஆயில் - தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்துகொள்ளவும்.

    வெங்காயம், பூண்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொரித்து கொள்ளவும். (மொறு மொறு என்று பொரிந்திருக்க வேண்டும்)

    அடுத்து பூண்டைபோட்டு அதே போல் பொரித்து கொள்ளவும்.

    அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும்.

    காய்ந்த மிளகாயை கைகளால் நொறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொரித்த வெங்காயம், பூண்டைபோட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு ( காரத்திற்கேற்ப) நொறுக்கிய வறுத்த மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு முட்டையை எடுத்து நடுவில் சிறிதளவு கீறிக் அதன் நடுவில் வறுத்த வெங்காய மசாலாவை சிறிதளவு வைத்து மேலே சிறிதளவு உப்பு தண்ணீர், எலுமிச்சை சாறு, புளிக்கரைசல், மிக்ஸ்டு ஆயில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழை வைத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை பேஜோ ரெடி.

    இனிப்பு, மசாலா, புளிப்பு என எல்லாம் கலந்தது தான் சாட் ரெசிபி. இன்று 10 நிமிடத்தில் சமோசாவை கொண்டு எப்படி ருசியான சாட் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    சமோசா - 2
    அப்பளம் - 6
    தயிர் - 3 மேஜைக்கரண்டி
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    புதினா சட்னி - 2 தேக்கரண்டி
    புளி சட்னி - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    ஓமப் பொடி - 1 கப்
    உப்பு - சுவைக்க

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.

    அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும்.

    தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

    நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.

    அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும்.

    பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.

    அதன் மேல் ஓமப் பொடியை தூவவும்.

    இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.

    சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
    மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான சாட் செய்து கொடுக்க விரும்பினால் வெள்ளரிக்காய் சாட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 1
    கேரட் - 1
    கெட்டி தயிர் - அரை கப்
    சாட் மசாலா - ஒன்றரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
    ஓமப்பொடி (அ) மிக்ஸர் - அலங்கரிக்க
    புதினா இலைகள் - 1 கைப்பிடி
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும்.

    வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும்.

    அதன்மேல் புதினா இலையை வைத்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வட இந்தியாவில் ஷக்கர்கந்தி என்று அழைக்கப்படும் சக்கரைவள்ளிக் கிழங்கு சாட் மிகவும் பிரசித்தம். சுவையான ஷக்கர்கந்தி சாட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
    சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றி சூடானதும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைக்க வேண்டும்.

    வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.

    இது வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட். சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு... இந்தப் பருவத்தில் அதிகம் விளையக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×