என் மலர்
ஆரோக்கியம்

பட்டாணி பச்சை பயிறு அடை
புரோட்டீன் சத்து நிறைந்த பட்டாணி பச்சை பயிறு அடை
பட்டாணி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
தேவையான பொருட்கள்
பட்டாணி - கால் கிலோ
பச்சை பயிறு - கால் கிலோ
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - அரை கட்டு
வெங்காயம் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணி, பச்சை பயிரை 3 மணிநேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக கழுவி மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான பட்டாணி பச்சை பயிறு அடை ரெடி.
இதையும் படிக்கலாம்...10 நிமிடத்தில் செய்யலாம் முட்டை பிரை
Next Story