search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பிரசாரம்"

    • நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் விளக்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆலோசகர் ஜெயா தலைமை வகித்தார். லேப் டெக்னீசியன் முருகன் முன்னிலை வகித்தார்.

    நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்பரசு விளக்கினார். நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு லேப் டெக்னீசியன் நீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது
    • கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.

    நாகர்கோவில் :

    எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ந்தேதி "உலக எய்ட்ஸ் தினம்" அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்து கிராமிய கலை குழு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி வடசேரி பஸ் நிலையத்தில் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் டாக்டர் பெடலிக்ஸ் ஷமிலா தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத ரத்தம், தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பரவ வாய்ப்பு என நான்கு வழிகளில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தால் எச்.ஐ.வி. பரவாது. கர்ப்பிணி பெண்கள் தவறாமல் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பில்லாமல் பிறக்க அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். அதற்கான மருந்து எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தை எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் ஆரோக்கி யமாக பிறக்கும்.

    அனை வரும் அனைத்து அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.டி. எடுத்துக்கொண்டால் வைரசை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் பொதுமக்க ளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மேற்பார்வையாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கலைக்குழுவினர் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய பாடல்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்.ஐ.வி.,எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

    • நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள் நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி தக்கான்குளம் அருகே நாட்டுப்புற கலைகள் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் அருண் ஆதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சோளிங்கர் அரசு மருத்துவமனை எச்.ஐ.வி. ஆலோசகர் சித்ரகலா கலந்துகொண்டு எய்ட்ஸ் பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறை, எய்ட்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்ட நபரை சக மனிதனாக பார்க்க வேண்டும், பாலியல் நோய் குறித்தும், பாதுகாப்பான உடலுறவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பாடல், தப்பாட்டம், நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் துறைசார்ந்த பணியா ளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல்.
    • ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல். பத்து ரூபாய் நாணயங்களை மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் வாங்குவதில்லை என்ற புகார் இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஞானவேல் தனது பிரியாணி கடைக்கு ரூ.10 நாணயம் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.120 மதிப்பிலான பிரியாணியை இலவசமாக கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ‘மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்
    • நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    சென்னை :

    சென்னை தேனாம்பேட்டை- அண்ணாசாலையில் கடந்த மாதம் 7-ந்தேதி அன்று மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்ட வழக்கில் 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினாய் (வயது 22) என்ற 'யூடியூபர்' பிரபலத்தை போலீசார் தேடி வந்தனர்.

    அவர் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் வழங்கிய நிலையில், 'அந்த வாலிபர் எங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் 3 வாரங்கள் திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும்.

    மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்' என்று நிபந்தனையும் விதித்தார்.

    அதன்படி வாலிபர் கோட்லா அலெக்ஸ் பினாய் காலை மற்றும் மாலை வேளையில் அண்ணாசாலை-தேனாம்பேட்டை சந்திப்பில், 'சாலை விதிகளை கடைபிடிப்போம். சாலை விதிகளை மதிப்போம். விபத்துகளை தவிர்ப்போம்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    'இரு சக்கர வாகனத்தை கொண்டு சாலையில் சாகசங்கள் எதுவும் செய்ய மாட்டேன்' என்ற வாசகங்கள் அடங்கிய பாதகையை கையில் ஏந்தியபடி நின்றார்.

    மேலும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் வாகன ஓட்டிகளிடம் வினியோகம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'இனி நான் எங்கேயும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட மாட்டேன்' என்று உறுதியுடன் கூறினார்.

    நீதிபதி வழங்கி உள்ள இந்த தீர்ப்பு பைக் ரேஸ் பிரியர்களை கதிகலங்க வைத்துள்ளது.

    • அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்து வாகனத்தை பார்வையிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன், நகர செயலாளர் பூங்காவனம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி.தொடங்கி வைத்தார்
    • நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல், குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசார வாகனம் வரவுள்ளது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கதிர் ஆனந்த் எம்‌.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அமலு விஜயன் எம். எல். ஏ., வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1075 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சரா வாகனம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைந்து பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புற வார்டுகளில் வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    • போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மிரச்சாரம் இண்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    நல்லம்பள்ளி,

    இண்டூர் இணைந்த கரங்கள் அமைப்பின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மிரச்சாரம் இண்டூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் தலைமை வகித்தார்.சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    போதை பொரு ளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.காவல் உதவி ஆய்வா ளர்கள் சீனிவாசன்,சேகர் பேரணியை தொடங்கி வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் தொழிற்சங்க. தலைவர்மா தேஸ்வரன்,முன்னாள் இண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலே சன்,கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகிஅப்புனு ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் வள்ளல் அதியமான் பம்பை மற்றும் கிராமியக்குழு மற்றும் ஸ்ரீஆயாத்தம்மன் நாடக கலைக்குழுவின் சார்பில் போதை பொருளுக்கு எதிராக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கண்ணண்,எல்லப்பன்,சிங்காரவேல்,சிம்பு,செல்வம் மற்றும் இண்டூர் இணைந்த கரங்கள் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • சமயநல்லூர் சரக பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. போதையினால் ஏற்படும் தீமைகள், நோய்கள், பாதிப்புகள், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி உறுதிமொழிகள், கருத்தரங்குகள், வினாடி-வினாபோட்டி, பேச்சு, ஓவிய, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அதேபோல் பள்ளிகள், கோவில்கள், பஸ்நிலையங்கள், மார்கெட்டுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ''காவல்துறைஅறிவிப்பு'' என்ற தலைப்பின்கீழ் போதைபொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா, மது போன்றவை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தால் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையங்களின் தொலைபேசி, கைபேசி எண்களை குறிப்பிட்ட பதாதைகள் வைக்கப்பட்டு சமயநல்லூர் போலீஸ்சரகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • எடை குறைந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
    • விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது.

    காஞ்சிபுரம்:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எடை குறைந்த நவீன சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை சிலிண்டர்களில் முன்னா 2 கிலோ, சோட்டு 5 கிலோ, காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிண்டர்கள் குறித்தும், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5 தேதி இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 29 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனம் நேற்று மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது. காஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைக் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    15 நாட்கள் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த அளவு எடை சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விற்பனை ஆகவில்லை.
    • பொது மக்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எடை குறைந்து நவீன சிலிண்டர்கள் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடிய 2 கிலோ எடையில் சிலிண்டர் பயன்பாட்டில் உள்ளது.

    இதுவரை வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 5 கிலோ எடை சிலிண்டர் மற்றும் 10 கிலோ எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது. பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடம் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த அளவு எடை சிலிண்டர்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விற்பனை ஆகவில்லை. இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5-ந் தேதி ஐ.ஓ.சி. நிறுவன தலைவர் எஸ்.எம். வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் மூலம் புறநகர் பகுதியில் உள்ள 25 விநியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பிரசார வாகனம் மாங்காட்டை அடுத்த பட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு வந்தது. அங்கு மாணவ-மாணவிகள், பொது மக்களுக்கு கியாஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது, கியாஸ் கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பிரசார வாகனம் சென்னை முழுவதும் சுற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    போரூர் செல்வி கியாஸ் ஏஜென்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் செல்வி கியாஸ் உரிமையாளர் குணசுந்தரி, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரத்தில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் "தூய்மை பணி" குறித்து என் பள்ளி என் பெருமை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட கலெக்டர்மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா, மாவட்ட கல்வி அலுவலர்காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலக மேற்பார்வையாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர். 

    ×